நிச்சயம் அரசியலுக்கு வருவேன் -மீரா மிதுன்

0 1,146

சமூக விழிப்புணர்விற்காக நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என நடிகை மீரா மிதுன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்ப­ாக மீரா மிதுன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சேரன் மீது சாட்டிய குற்றத்தால் பிரபலமானார்.

தொடர்ந்து பிக்பொஸ் போட்டியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

பின்னர் தனது முன்னாள் மெனேஜரான ஜோ மைக்கெலை ஆளை வைத்து தூக்குமாறு அவர் பேசிய ஆடியோ வெளியாகியது.

தொடர்ந்து சேரன் குறித்து தவறாக எழுத வேண்டும் என்று தனது நண்பரிடம் பேசிய ஆடியோவும் பின்னர் தானும் முகெனும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை பரப்ப வேண்டும் என்று கூறிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் இருந்து நீக்கப்பட்ட அவர், ெபாலிவூட்டுதான் தனது திறமைக்கு சரியான இடம், தமிழ்நாடே வேண்டாம் என கூறி மும்பை சென்றார்.

அங்கு இருந்தபடியே தமிழக அரசை விமர்சித்து டுவிட்டி வந்தார்.

மேலும் தனக்கு அநீதி இழைத்த சென்னை பொலிஸை கூண்டோடு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வாயிலாக புகார் கூறினார். அதோடு நிறுத்தாத மீரா கையில் தம், பப்பில் டான்ஸ், அரை நிர்வாண போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பிக்ெபாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பேமென்ட்டை விஜய் டி.வி தரவில்லை என்று சரமாரியாக சாடினார்.

தொடர்ந்து பேசிய மீரா மிதுன், இந்த சமு­தாயம் ஆணா­திக்கம் மிக்­கதாக உள்ளது.

சமூக விழிப்­­புணர்வுக்காக எதிர்­காலத்தில் அரசிய­லுக்கு வருவேன்.

எந்­தக் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று இப்போது கூற விரும்பவில்லை என மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!