மெக்டொனால்ட் CEO ஈஸ்டர்புரூக் அதிரடி நீக்கம்; ஊழியருடனான உறவு காரணம்

McDonald's CEO Steve Easterbrook forced out over 'consensual relationship' with employee

0 2,672

உலகப் பிரசித்தி பெற்ற உணவு விடுதி சங்கிலித் தொடரான மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்புரூக், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவருடனான உறவே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருடனான உறவு தொடர்பான குற்றச்சாட்டையடு;த்து ஸ்டீவ் ஈஸ்டர்புரூக்கை பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) பதவியிலிருந்து நீக்குவதற்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் சபை கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்தது.

இந்நிலையில், அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என ஞாயிற்றுக்கிழமை மெக்னொல்ட் நிறுவனம் அறிவித்தது.

பிரித்தானியரான ஸ்டீவ் ஈஸ்டர்புரூக் (52) 1993 ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் முதன்முதலில் லண்டனில் முகாமையாளாக பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.

மேற்படி உறவு பரஸ்பர சம்மதத்துடனானது என்ற போதிலும், கம்பனியின் கொள்கைகளை ஈஸ்டர்புரூக் மீறிவிட்டார் என மெக்னொல்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் தவறிழைத்துவிட்டதாக ஸ்டீவ் ஈஸ்டர்புரூக் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பெறுமானத்தை கருத்திற்கொண்டு, தான் விலக வேண்டும் என்ற பணிப்பாளர் சபையின் தீர்மானத்துடன் தான் உடன்படுவதாக ஸ்டீவ் ஈஸ்டர்புரூக் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பெற்ற ஸ்டீவ் ஈஸ்டர்புருக் 3 பிள்ளைகளின் தந்தை ஆவார். 2018 ஆம் ஆண்டில் அவரின் வருடாந்த ஊதியம் 159.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 288 கோடி இலங்கை ரூபா,  112 கோடி  இந்திய ரூபா) ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!