நானும் துணிச்சலான பெண் -தமன்னா

0 80

எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் சரி, அதற்காக மூலையில் உட்கார்ந்து அழக்கூடிய மிகச் சாதாரண பெண்ணல்ல நான் என நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது:இயற்கையில் நான் ஒரு துணிச்சலான பெண். அந்த இயல்பின் காரணமாக, வேலை செய்யும் இடத்தில், பாலியல் துன்புறுத்தல்களை இதுவரை எதிர் கொண்டதில்லை.

அப்படிப்­பட்ட சூழலில், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, எனக்குத் தெரியும்.

அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது, எனது அதிர்ஷ்டம்.

அதற்காக இதே நிலையே நீடிக்கும் என எடுத்துக் கொள்ள முடியாது.

பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள், மீடூ வில் துணிச்சலாகப் பேசியது நல்லது.

ஆனால், அவர்­களுக்கு, தொழில் ரீதியில் அடுத்தடுத்த வாய்ப்புகள் மறுக்கப்­படுகின்றன.

அது வருத்தமானது. அந்த நிலை மாற வேண்டும். ஒரு விஷயம் உங்களைப் பாதிக்கிறது என்று நினைத்தால், எதிர்த்­துப் போராட வேண்டும்.

அதற்கான துணிச்சல் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும்.

எதற்காகவும் உட்கார்ந்து அழுது வருத்தப்பட மாட்டேன்.

சினிமாவில் இத்தனை நாட்களும் தொய்வின்றி தாக்குப் பிடித்திருக்கிறேன் என்றால், என்னுடைய துணிச்சலும் ஒரு காரணம்.

நினைத்தபடி விஷயங்களைச் செய்ய முடிவதை பலமாக நினைக்கிறேன்.

யாருக்கும் பயப்படாமல், சுயமாகவும், துணிச்சலாகவும் எதையும் எதிர்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

நானும் அந்த வகை பெண்ணாகத்தான் இருக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!