அடுத்தடுத்து அறிவிப்புக்களை வெளியிட்ட கௌதம் மேனன்

0 613

தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவருடைய பல படங்கள் மிகவும் தாமதமாகத்தான் வெளியாகும்.

அவர் இயக்கத்தில் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ஜோஷ்வா’ ஆகிய படங்கள் அடுத்­தடுத்து வெளியாக உள்ளன. இது பற்றிய அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கௌதம் மேனன்.

தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்போதோ வெளியாக வேண்டியது. பல வெளியீட்டுத் திகதிகளை அறிவித்து, பின்னர் தள்ளி வைத்து இப்போது இம்மாதம் 29 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்துவிட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் என்றும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும், விக்ரமுடன் பணி புரிந்தது மிகப் பெரும் அனுபவ­ம் என்று கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் வெளியீட்டிற்காக வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ், கௌதம் மேனனுக்கு மிகப் பெரும் உதவிகளைச் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதற்குப் பிரதிபலனாக ஐசரி கணேஷ் உறவினரான வருண் நடிக்கும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கிக் கொடுக்கிறார் கௌதம் மேனன் என்பதுதான் கோலிவூட்டின் தகவல். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்யும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் கௌதம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!