என் காத்திருப்புக்கு இப்போ பலன் கிடைத்திருக்கு -வாணி போஜன்

0 94

நான் நடிச்ச `ஓ மை கடவுளே’ படத்தோட டீசருக்கு நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்துக்கிட்டிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!” உற்சாகமாக உரையாடலைத் தொடங்கினார், நடிகை வாணி போஜன்.

 

“இந்தப் படத்துல நடிக்க அழைப்பு வந்தப்போ, `படத்துல யாரெல்லாம் கமிட் ஆகியிருக்காங்க’ன்னு கேட்டுக்கிட்டேன். பிறகு, கதையைப் படிச்சுட்டு சொல்றேன்னு, ஸ்கிரிப்டைப் படிச்சேன்.

கதை மட்டுமில்ல, என் கெரக்டரும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப தனித்துவமாவும் இருந்தது. இது ஒரு டபிள் ஹீரோயின் சப்ஜெக்ட். மெயின் ஹீரோயினா ரித்திகா பண்றதா சொன்னாங்க.

நான் ஓகே சொன்ன பிறகு, இயக்குநர் அஸ்வந்த் போன் பண்ணி, `ரொம்ப சந்தோஷம்’னு சொன்னார்.என்னைச் சுத்தி இருந்தவங்க எல்லோரும் ெபாசிட்டிவா இருந்ததனால, `ஓ மை கடவுளே’ படத்துல நடிச்சது நல்ல அனுபவமா இருந்தது” என்றவரிடம்,

`தேசிய விருது வாங்கிய நடிகை படத்துல இருக்காங்கன்னு ஏதும் தயக்கம் இருந்ததா?
ஒரு நடிகைக்கு அழகே, திரையில் எவ்வளவு நேரம் வர்றோம்ங்கிறது இல்லை. கிடைக்கிற கதாபாத்திரத்தை எவ்வளவு அழகா வெளிப்படுத்துறாங்க அப்டீங்கிறதுதான்.

என் கெரக்டர் முக்கியமானதா இருந்தது, அது போதும்னு நினைச்சேன்.

ரித்திகாவும் இந்தப் படத்துல ரொம்பக் கியூட்டா நடிச்சிருக்காங்க.

அவங்களைத் தவிர வேற யாராலும் அந்த கெரக்டர்ல நடிச்சிருக்க முடியாது. எனக்கும் ரித்திகாவுக்கும் காம்பினேஷன் சீன்ஸ் படத்துல இருக்கு.

`தேசிய விருது’ வாங்கிய நடிகைங்கிற எந்தவிதமான பந்தாவும் அவங்ககிட்ட இல்லை.

என்னைத்தான் அவங்க சீனியர் மாதிரி நடத்துனாங்க.

இந்தப் படத்துல நடிச்ச பிறகு, ரொம்ப குளோஸ் ஆகிட்டோம்.நல்லா டிரெஸ் பண்ணிட்டு வந்தா,

`நல்லாயிருக்கு இது!’ங்கிற கமென்ட் முதல்ல அவங்ககிட்ட இருந்துதான் வரும்.

ஷூட்டிங் ஸ்பொட்டுக்கு விஜய் சேதுபதி வந்தப்போ எப்படியிருந்தது?
அவர் வர்றப்போ எனக்கு ஷூட்டிங் இல்லை.

ஆனாலும், இயக்குநர் போன் பண்ணி ஸ்பொட்டுக்கு வரச் சொன்னார். உடனே ஸ்பொட்டுக்கு ஓடிட்டேன்.

`டி.வி-யில உங்களைப் பார்த்திருக்கேன்’னு சொல்லி, நிறையப் பேசினார். எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. பிறகு, அவரை ஒரு விருது விழாவில் பார்த்தேன். முதல்ல கடந்துபோனவர், திரும்பி வரும்போது, `எப்படியிருக்கீங்க’ன்னு கேட்டுட்டுப் போனார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தப்போ நிறைய நெகட்டிவ் கொமன்ட்ஸும் வந்திருக்கும். அதை எப்படிக் கடந்து வந்தீங்க?
“எப்பவுமே, நான் மத்தவங்க சொல்றதை மைண்டுல ஏத்திக்க மாட்டேன். ெபாசிட்டிவ், நெகட்டிவ் கொமன்ட்ஸ் எல்லாம் எப்போவும் வந்துக்கிட்டுதான் இருக்கும்.

சீரியலிலிருந்து சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு வருடம் இடைவெளி விழுந்தது. அப்போ, `உனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருது, ஏன் எதையும் எடுத்துக்க மாட்டேங்கிற’ன்னு கேட்பாங்க. அதுக்கு நான், `பெஸ்ட் படத்துக்காகக் காத்திருக்கேன்’னு சொல்வேன். அதுக்கான பலன் இப்போ கிடைச்சிருக்கு!

விஜய் தேவரகொண்டா தயாரிப்புல தெலுங்கில் முதல் படம்… எப்படி இருக்கு இந்த அனுபவம்?
அவர் தயாரிக்கிற தெலுங்குப் படத்துல நான் அறிமுகமானது சந்தோஷம்.

எல்லோரும் அவரை `ரெளடி பாய்’னு சொல்வாங்க.

ஆனா, அவர் `ரெளடி பேபி’. சமீபத்துல, என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னார்.

`Meeku Maathrame Cheptha’ படத்துல நடிச்சப்போ, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போற ஃபீல் இல்லை.

ஒரு தயாரிப்பாளரா அவரை நம்பி படம் பண்ற எல்லோரையும் சந்தோஷமா வெச்சுக்குவார்.

படம் பார்த்துட்டு என்ஜாய் பண்ணி வாழ்த்துகள் சொன்னார்.

இந்தப் படத்தின் இயக்குநர் சமீர், என் விளம்பரப் படங்களைப் பார்த்துட்டு எனக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்திருக்கார்.

தமிழ் நடிகர்களை தெலுங்கு சினிமா துறையினர் ரொம்ப மதிக்கிறாங்க.

அதுவே இந்தப் படத்துல உற்சாகமா நடிக்க வெச்சது என்கிறார், வாணி போஜன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!