விவசாயியாக நடிக்கும் ஜெயம் ரவி

0 70

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லக்‌ஷ்மண் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள படம் பூமி.

ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக இது உருவாகிறது.இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நாயகி நிதி அகர்வால் நடித்து வருகிறார். விவசாயிகளின் பிரச்சினையை மையமாக கொண்டு ‘பூமி’ படம் உருவாகி வருகிறது.

பூமியின் பெர்ஸ்ட் லுக்கிலே அது ஒரு விவசாய படம் என்பது தெரிந்து விடும். சமீபத்தில் விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

இந்நிலையில், ஜெயம் ரவியின் ‘பூமி’ எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, இயக்குநர் லக்‌ஷமண், விவசாயம் இல்லை என்றால், பூமி என்னவாகும் என்பதையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நிச்சயம் இந்த படம் தனித்துவமாக எடுத்துரைக்கும் என்றார்.

ஜெயம் ரவி இந்த படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

கிராமத்தில், ஒரு பிரச்சினையை சந்திக்கும் ஜெயம் ரவி, விவசாயத்திற்கான விஞ்ஞானத்தை ஆராய்ச்சி செய்வதில் இறங்கி விவசாயியாக மாறுவார் என்ற அளவுக்கு படத்தின் கதையை லீக் செய்துள்ளார்.

மேலும், நாயகி நிதி அகர்வால், ெமாடர்ன் பெண்ணாகவும், ஜெயம் ரவியின் சேவையை பார்த்து, அவருக்கு உதவும் ரோலிலும் நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

‘பூமி’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் உணர்வுகளை தூண்டும் வகையில் வந்தே மாதரம் பாடல் இடம்பெறும் என்றும், ‘பூமி’ படத்திற்காக அந்த பாடலை இசையமைப்பாளர் இமான் ரீ கிரியேட் செய்துள்ளார் என்ற தகவலையும் இயக்குநர் லக்‌ஷ்மண் பகிர்ந்துள்ளார்.

‘கோமாளி’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பாடலை போலவே இந்த வந்தே மாதரம் பாடலும் மனதை நெகிழவைக்குமாம். மேலும், எம்.ஜி.ஆரின் விவசாயி படத்தில் வரும் “கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி” போன்று விவசாயிகளின் சிறப்பை கூறும் பாடல் ஒன்றையும் இமான் உருவாக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!