வரலாற்றில் இன்று: நவம்பர் 06: 1860- அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் தெரிவானார்

0 79

1632 : ஐரோப்பில் நடைபெற்ற முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டார்.

1844 : டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

1860 :ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார்.

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு ஜெபர்சன் டேவிஸ் தலைவரானார்.

1913 : தென் ஆபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1935 : எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1860: அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் தெரிவானார்

 

1943 : இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்துஇ முஸ்லிம் கலவரத்தை முடிவூக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

1943 : இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா படையினர் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜெர்மனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.

1944 : புளுட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இது பயன்பட்டது.

1962 : ஐ.நா பொதுச்சபை தென் ஆபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1963 : வியட்நாம் போர்: நவம்பர் முதலாம் திகதி இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்துஇ இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.

1965 : ஐக்கிய அமெரிக்காவூக்கு குடியேற விரும்பிய கியூ+பா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூ+பாவூம் ஐக்கிய அமெரிக்காவூம் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250இ000 கியூ+பர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

1977 : ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1984: அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரொனால்ட் றீகன் இரண்டாவது தடவையாக தெரிவானார்.

1985 : கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

1991: வளைகுடா யூத்தத்தின்போது இறுதியாக எரிந்துகொண்டிருந்த எண்ணெய் வயலின் தீ அணைக்கப்பட்டது.

1999 : பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்து இருப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அவூஸ்திரேலியர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

2004 : இங்கிலாந்தில் கடுகதி ரயிலொன்று காரொன்றுடன் மோதியதால் 7 பேர் பலியானதுடன் 150 பேர் காயமடைந்தனர்.

2012: அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது தடவையாக தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!