நியூயோர்க் மரதனில் கென்யர்கள் ஆதிக்கம்

0 686

நியூயோர்க் நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற நியூயோர்க் மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரண்டு பிரி­வு­க­ளிலும் கென்­யர்கள் வெற்­றி­பெற்று தமது ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்­தினர்.

 

ஆண்­க­ளுக்­கான மரதன் ஓட்டப் போட்­டியை 2 மணித்­தி­யா­லங்கள், 08 நிமி­டங்கள் 13 செக்­கன்­களில் நிறைவு செய்த கென்­யாவின் ஜெவ்றி கெம்­வொரர் வெற்­றி­பெற்றார். நியூயோர்க் மர­தனில் கடந்த மூன்று வரு­டங்­களில் ஜெவ்றி வெற்­றி­யீட்­டிய இரண்­டா­வது சந்­தர்ப்பம் இது­வாகும்.

இப் போட்­டியில் மற்­றொரு கென்­ய­ரான அல்பர்ட் கொரிர் (2 ம., 08 நி. 36 செக்.) இரண்டாம் இடத்­தையும் எதி­யோப்­பி­யாவின் கிர்மா பெக்­கலே மூன்றாம் இடத்­தையும் பெற்­றனர்.

பெண்­க­ளுக்­கான மரதன் ஓட்டப் போட்­டியை 2 மணித்­தி­யா­லங்கள், 22 நிமி­டங்கள், 38 செக்­கன்­களில் நிறைவு செய்த கென்­யாவின் ஜொய்­சிலின் கெப்­கொஸ்கி முதலாம் இடத்தைப் பெற்றார். ஜொய்­சி­லினின் சக நாட்­ட­வ­ரான மேரி ஜெப்­கோஸ்கி 54 செக்­கன்கள் வித்­தி­யா­சத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

எதியோப்பியாவைச் சேர்ந்த ரூட்டி அகா மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!