2019 அபு தாபி ரீ10இல் இலங்கை வீரர்கள்

0 116

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் இம் மாதம் நடை­பெ­ற­வுள்ள 2019 அபு தாபி ரீ10 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள 8 அணி­களில் ௭ அணியில் இலங்கை வீரர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

ஏற்­க­னவே இலங்­கை­யி­லி­ருந்து ஏழு வீரர்கள் மாத்­தி­ரமே பங்­கு­பற்­று­வ­தாக இருந்­தது.

ஆனால் பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் நாடு­களின் தேசிய அணிகள் சர்­வ­தேச கிரிக்கெட் தொடர்­களில் விளை­யா­டி­வ­ரு­வதால் அந்த நாடு­களின் கிரிக்கெட் சபைகள் தங்­க­ளது வீரர்கள் இந்த சுற்றுப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு அனு­மதி வழங்க மறுத்­தது.
இதன் கார­ண­மாக இலங்கை வீரர்­க­ளுக்கு புதிய வாய்ப்­புகள் ஏலத்தின் மூலம் கிடைத்­துள்­ளன.

பங்ளா டைகர்ஸ் அணியில் திசேர பெரேரா (அணித் தலைவர்), ஷெஹான் ஜய­சூ­ரய கெவின் கோத்­தா­கொட, ப்ரபாத் ஜய­சூ­ரிய ஆகி­யோரும்,டெக்கான் க்ளடி­யேட்டர்ஸ் அணியில் பானுக்க ராஜ­ப­க்ஷவும்,டெல்ஹி புல்ஸ் அணியில் குசல் பெரேரா, துஷ்­மன்த சமீர, ஏஞ்­சலோ மெத்யூஸ் ஆகி­யோரும்கர்­நா­டகா டஸ்கர்ஸ் அணியில் மலிந்த புஷ்­ப­கு­மா­ரவும்,மராத அரே­பியன்ஸ் அணியில் லசித் மாலிங்க, தசுன் ஷானக்க, வனிந்த ஹச­ரங்க ஆகி­யோரும்,நொதர்ன் வொரியர்ஸ் அணியில் நுவன் ப்ரதீப், அசேல குண­ரத்ன ஆகி­யோரும்,டீம் அபு தாபி அணியில் நிரோஷன் திக்­வெல்­லவும் இடம்­பெ­று­கின்­றனர்.

இரண்டு குழுக்­க­ளாக வகுக்­கப்­பட்டு நடத்­தப்­படும் அபு தாபி ரீ10 கிரிக்கெட் போட்­டியில் ஏ குழுவில் பங்ளா டைகர்ஸ், டெக்கான் க்ளடி­யேட்டர்ஸ், டெல்ஹி புல்ஸ், கர்­நா­டகா டஸ்கர்ஸ் ஆகிய அணி­களும் பி குழுவில் மராத அரே­பியன்ஸ், நொதர்ன் வொரியர்ஸ், க்வாலண்டர்ஸ், ரீம் அபு தாபி ஆகிய அணி­களும் இடம்­பெ­று­கின்­றன.

லீல் சுற்றில் அந்­தந்த குழுவில் இடம் பெறும் அணிகள் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டும். லீக் சுற்று நிறைவில் இரண்டு குழுக்­க­ளிலும் அணிகள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்டு மற்­றைய குழுவில் உள்ள அணி­க­ளுடன் சுப்பர் லீக் சுற்றில் மோதும்.
ஐ.பி.எல்.இல் போன்று இறுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு சம்பியன் அணி தீர்மானிக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!