வர்த்தக சுப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஓஷன் லங்கா, மாஸ் கெஷுவல்லைன் சம்பியனாகின

0 32

வர்த்­தக கரப்­பந்­தாட்ட சங்கம் இவ் வருடம் ஏற்­பாடு செய்­தி­ருந்த வர்த்­தக நிறு­வன அணி­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்டப் போட்­டி­களில் பிர­தான பிரி­வான சுப்பர் லீக் ஆண்கள் பிரிவில் ஓஷன் லங்கா பிறைவேட் லிமிட்டெட் அணியும் பெண்கள் பிரிவில் மாவத்­த­கம மாஸ் கெஷு­வல்லைன் அணியும் சம்­பியன் பட்­டங்­களை சூடிக்­கொண்­டன.

மாஸ் கெஷுவல்லைன் பெண்கள் அணியினர்

 

மஹ­ர­கம, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்­ளக அரங்கில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான சுப்பர் லீக் இறுதிப் போட்­டியில் கோர்ட்ஓல்ட்ஸ் க்லோதிங் லங்கா பிறைவேட் லிமிட்டெட் அணியை எதிர்த்­தா­டிய ஓஷன் லங்கா பிறைவேட் லிமிட்டெட் அணி 3 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

ஓஷன் லங்கா பிறைவெட் லிமிட்டெட் ஆண்கள் அணியினர்

 

முதல் செட்டில் 23 – 25 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் தோல்வி அடைந்த ஓஷன் லங்கா அணி, அடுத்து மூன்று செட்­க­ளிலும் முறையே 25 – 23, 25 – 21, 25 – 17 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.

பெண்­க­ளுக்­கான சுப்பர் லீக் இறுதிப் போட்­டியில் சீதுவை ப்ரெண்டிக்ஸ் கெஷ­வல்­வெயார் அணியை சந்­தித்த மாவத்­த­கம மாஸ் கெஷு­வல்லைன் அணி 3 – 1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது. முதல் இரண்டு செட்­களில் 25–17, 25 – 15 என்ற புள்­ளிகள் கணக்கில் இல­கு­வாக வெற்­றி­பெற்ற மாஸ் கெஷு­வல்லைன், மூன்­றா­வது செட்டில் 19–25 என தோல்வி அடைந்­தது.

ஆனால், நான்­கா­வது செட்டில் மீண்டும் மிகத் திற­மை­யாக விளை­யா­டிய மாஸ் கெஷுவல்லைன் 25 – 8 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

சுப்பர் லீக் பிரிவில் அதி சிறந்த வீர­ராக ஓஷன் லங்கா அணியின் கயான் மல்­லிக்­க­ரட்­னவும் அதி சிறந்த வீராங்­க­னை­யாக மாஸ் கெஷு­வல்­லைனின் தீப்­பிகா பண்­டா­ரவும் தெரிவு செய்­யப்­பட்­டனர். கயா­னுக்கு மோட்டார் சைக்­கிளும் தீப்­பி­கா­வுக்கு ஸ்கூட்­டியும் பரி­சு­க­ளாக வழங்­கப்­பட்­டன.

சம்­பி­யன்ஷிப் ஆண்கள் பிரிவில் மெலிபன் பிஸ்கட்ஸ் மெனு­வெ­க்ஷரிஸ் அணியும் பெண்கள் பிரிவில் கஹா­து­டுவ ஹைத­ர­மானி அணியும் ஏ பிரி­வுக்­கான ஆண்கள் பிரிவில் பாணந்­துறை மாஸ் யுனிச்­சேலா அணியும் பெண்கள் பிரிவில் ஒமேகா லைன் அணியும் சம்­பி­ய­னா­கின.

சம­்பியன் அணி­க­ளுக்கும் இரண்டாம் இடங்­களைப் பெற்ற அணி­க­ளுக்கும் வெற்றிக் கிண்­ணங்­க­ளுடன் பணப்­ப­ரி­சில்­களும் வழங்கப்பட்டன. (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!