19 வயதின்கீழ் ஆசிய கால்பந்தாட்ட தகுதிகாண் கத்தாரை இன்று இலங்கை எதிர்த்தாடுகின்றது

0 123

(நெவில் அன்­தனி)

உஸ்­பெ­கிஸ்­தானில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட ஆசிய கால்­பந்­தாட்ட சம்­ப­ியன்ஷிப் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக கத்தார், தோஹா நகரில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள தகு­திகாண் சுற்றில் இலங்கை விளை­யா­ட­வுள்­ளது.

தகு­திகாண் சுற்றில் ‘பி’ குழுவில் இடம்­பெறும் இலங்கை, இந்தக் குழு­வுக்­கான போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான கத்­தாரை தோஹா, அஸ்­பயர் 5 விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு எதிர்த்­தா­ட­வுள்­ளது.

இக் குழுவில் யேமன், துர்க்­மே­னிஸ்தான் ஆகிய நாடு­களும் இடம்­பெ­று­கின்­றன.

கத்­தாரில் நடை­பெறும் ‘பி’ குழு­வுக்­கான தகுதிச் சுற்று மிகவும் கடி­ன­மா­ன­தாக அமையும் என்­ற­போ­திலும் அதி சிறந்த கால்­பந்­தாட்ட ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி எதி­ர­ணி­க­ளுக்கு சவால் விடுக்­க­வுள்­ள­தாக 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி பயிற்­றுநர் மொஹமத் அமா­னுல்லா தெரி­வித்தார்.

மலே­சியா, சைனீஸ் தாய்ப்பே அணி­க­ளுக்கு எதி­ராக மலே­சி­யாவில் நடை­பெற்ற  பயிற்சிப் போட்­டி­களில் தோல்வி அடைந்த போதிலும் சகல வீரர்­க­ளுக்கும் வாய்ப்பு வழங்கி ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் பலம், பல­வீ­னத்தை அறிந்­து­கொண்­ட­தாகக் குறிப்­பிட்ட அமான், வித்­தி­யா­ச­மான தந்­தி­ரோ­பா­யங்­க­ளுடன் தோஹாவில் போட்­டி­களை எதிர்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் கூறினார்.

‘நாங்கள் நேர்­ம­றை­யான மனோ­பா­வத்­து­ட­னேயே போட்­டி­களை எதிர்­கொள்­ள­வுள்ளோம். எம்மால் முடியும் என்ற உணர்வை வீரர்கள் மத்­தியில் அதி­க­ரிக்கச் செய்­துள்ளேன். எந்­நே­ரமும் முடி­யாது என்ற எதிர்­ம­றை­யான மனோ­நிலை இருக்­கக்­கூ­டாது. போட்­டி­களில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், திற­மை­யாக விளை­யா­டு­வ­துதான் முக்­கியம்’ என தொலை­பேசி வாயி­லாக தொடர்­பு­கொண்­ட­போது தோஹா­வி­லி­ருந்து அமா­னுல்லா தெரி­வித்தார்.

மற்­றைய அணி­களைப் போன்று வருடக் கணக்­காக அல்­லது மாதக் கணக்­காக 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி பயிற்­சியில் ஈடு­ப­ட­வில்லை என்­பதை சுட்­டிக்­காட்­டிய அமா­னுல்லா, ஓரிரு மாத பயிற்­சி­யு­ட­னேயே உலக தர­நிலை வரி­சையில் இலங்­கையை விட உய­ரிய நிலையில் இருக்கும் நாடு­களை எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

மலே­சி­யா­வுக்­கான சுற்றுப் பய­ணத்தில் இரண்டு வீரர்கள் பிர­கா­சிக்கத் தவ­றி­யதால் குழாத்­தி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தா­கவும் புதி­தாக ஒரு வீரரை இணைத்­துள்­ள­தா­கவும் முன்­வ­ரிசை வீரர் ரகு­மா­னியா ஷபீரை மத்­திய அல்­லது பின்­வ­ரிசை வீர­ராக விளை­யா­ட­வைக்­க­வுள்­ள­தா­கவும் பயிற்­றுநர் கூறினார்.

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணியின் தலை­வ­ராக புனித பேது­ரு­வா­னவர் கல்­லூ­ரியின் முன்னாள் வீரர் ரசூ­னியா ஷபிர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் உதவி அணித் தலை­வ­ராக மரு­தானை ஸாஹிரா வீரர் எம்.எம்.எம். முஷ்பிர் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

இவ்­வ­ணியில் கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் மகா வித்­தி­யா­லய வீரர் கண்ணன் தேனுஷன், இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்­லூ­ரியைச் சேர்ந்த மரி­ய­நேசன் பிரசாந்த், பாக்­கி­ய­நாதன் ரெக்சன், பம்­ப­லப்­பிட்டி புனித பேது­ரு­வா­னவர் கல:லூரியைச் சேர்ந்த அருச்­சுனன் பிரசாந்த் ஆகி­யோ­ருடன் தமிழ் பேசக்­கூ­டிய 17 வீரர்கள் இடம்­பெ­று­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை குழாம்
ரசூ­னியா எம். ஷபீர் (அணித் தலைவர்), எம். எம். எம். முஷ்பிர் (உதவி அணித் தலைவர்), எம்.எஸ்.எம். ஷக்கிர், அருச்­சுனன் பிரசாந்த், கயத் ராஜ­பக்ஷ, பி. ரெக்சன், ஹசிக்க நவோத, ஷிஷான் ப்ரபுத்த, ஐ. எம். ஷவ்ரான், எம். என். எம். அப்கர், எச். ரூமி ராஸா, எம். எஸ். எம். குர்ஷீத், எம். என். எம். சாஜித், ரெஹான் ப்றயன், எம். தலால் ஷாஹிப், அவிஷ்க தேஷான், கே. தேனுசன், எம். என். அப்துல் பாசித், கிஹான் சந்தீப்ப, ஏ. பிரவீன், எம். ஆர். ஜெஸ்மி, எம். என். எம். ரிக்காஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!