தாய்லாந்து சோதனைச்சாவடியில் தாக்குதல் : 15 பேர் பலி

15 killed in suspected rebel attacks in Thailand's south: army

0 809

தாய்லாந்தில் சோதனைச்சாவடியொன்றின் மீது ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாய்லந்தின் தென் பகுதியிலுள்ள யாலா மாகாணத்தில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்

சோதனைச்சாவடியொன்றில் இருந்த சிவில் பாதுகாப்புத் தொண்டர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி; பிரயோகம் செய்தனர் என அதிகாரிகள் தெரிவிததுள்ளனர். இச்சம்பவத்தில் 15 பேர் பலியானதுடன் மேமூம் மூவர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தின் தென் பகுதியிலுள்ள 3 மாகாணங்களில் மலாய் முஸ்லிம்கள் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர். 15 வருடங்களாக அங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன.

அப்பிராந்தியம் இராணுவச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸ், இராணுவத்தினருடன், பயிற்சியளிக்கப்பட்ட சிவில் தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!