13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா இலங்கை பளுதூக்கல் அணியில் ஆர்ஷிகா

0 104

(நெவில் அன்­தனி)

நேபா­ளத்தின் காத்­மண்டு மற்றும் பொக்­கா­ராவில் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான இலங்கை பளு­தூக்கல் அணியில் யாழ். சுண்­டிக்­குளி பெண்கள் கல்­லூரி மாணவி விஜ­ய­பாஸ்கர் ஆர்­ஷி­காவும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான பளு­தூக்கல் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை அணியில் 7 வீரர்­களும் 7 வீராங்­க­னை­களும் இடம்­பெ­று­கின்­றனர். பெண்­க­ளுக்­கான அணியில் பளு­தூக்­கலில் தேசிய சாத­னைக்கு சொந்­தக்­கா­ர­ரான ஆர்­ஷிகா இடம்­பெ­று­கின்றார்.

கடந்த சில வரு­டங்­க­ளாக அகில இலங்கை பாட­சா­லைகள் மற்றும் தேசிய மட்ட பளு­தூக்கல் போட்­டி­களில் பங்­கு­பற்றி பெரும்­பா­லான போட்­டி­களில் தங்கப் பதக்­கங்­களை சுவீ­க­ரித்­துள்ள ஆர்­ஷி­காவே இலங்கை பளு­தூக்கல் அணியில் இடம்­பெறும் வயதில் குறைந்த வீராங்­கனை ஆவார்.

அண்­மையில் நடை­பெற்ற தேசிய விளை­யாட்டு விழா மெய்­வல்­லுநர் போட்­டியில் பெண்­க­ளுக்­கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்­கு­பற்­றிய ஆர்­ஷிகா ஒரு தேசிய சாதனை, 2 போட்டி சாத­னை­க­ளுடன் தங்கப் பதக்­க­த்தை சுவீ­க­ரித்­தி­ருந்தார்.

மேலும் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவில் அதி சிறந்த பளு­தூக்கல் வீராங்­கனை விரு­தையும் ஆர்­ஷிகா வென்­றி­ருந்தார்.

இதே­வேளை பெண்கள் பளு­தூக்­கல அணிக்கு 2018 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவல் வெண்­கலப் பதக்கம் வென்ற சமரி வர்­ண­கு­ல­சூ­ரிய தலை­வி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஆர்­ஷிகா, சமரி ஆகி­யோ­ருடன் 2018 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் வெண்­கலப் பதக்கம் வென்ற ஹன்­சனி கோமஸ், எஸ் சம­ரக்கோன், எஸ். ராஜ­பக்ஷ, ஜே. ஹப்­பு­தென்ன, எஸ். ப்ரியன்தி ஆகி­யோரும் பெண்கள் பளு­தூக்கல் அணியில் இடம்­பெ­று­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க, பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்­திக்க திசா­நா­யக்க ஆண்கள் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவ­ருடன் ஆண்கள் அணியில் திவன்க பல­க­சிங்க, சத்­து­ரங்க லக்மால், சிரேஷ்ட அனு­ப­வ­சா­லி­யான சின்­தன கீதால் வித்­தா­னகே, எம். பீட்டர்ஸ், ஐ. குமார, யூ. சாருக்க ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

இவர்களில் கீதால் வித்தானகே, 2006 பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் 2010இல் வெள் ளிப் பதக்கத்தையும் வென்ற வராவார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!