அமெரிக்க மாநில தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு

0 1,120

 அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற மாநில ரீதியான தேர்தல்களில், ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அவரின் குடியரசுக்கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக விளங்கிய கென்டக்கி மாநிலத்தின ஆளுநர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஆளுநர் மெட் பேவினை தோற்கடித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அன்டி பேஷியர் வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை வேர்ஜீனியா மாநில சட்ட சபையின் இரு அவைககளிலும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.  20 வருடங்களின் பின்னர் வேர்ஜீனியா சட்டசபையின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி முழுக் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மிசிசிப்பி மாநில ஆளுந்ர தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டெட் ரீவ்ஸ் வெற்றியீட்டியுள்ளார். அவரின் வெற்றியை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் பாராட்டியுள்ளார்;.

 லூசியானா மாநில ஆளுநர் பதவிக்கு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஆளுநர் 46.6 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தை அடைந்தார்.

ஆனால், எவருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காததால் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!