யேமனின் ஹெளதி கிளர்சியாளர்களுடன் பேச்சு நடத்துவதாக சவூதி அறிவிப்பு

Riyadh in talks with Yemen's Houthi rebels, Saudi official says

0 648

யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்களடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சவூதி அரேபியா இன்று அறிவித்துள்ளது.

யேமன் அரச படையினருக்கு எதிராக, ஈரான் ஆதரவு கொண்ட ஹெளதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் யேமன் அரசுக்கு ஆதரவாக ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அண்மையில் சவூதி அரேபியாவிலுள்ள ஆராம்கோ நிறுவனத்தின் இரு எண்ணெய் நிலையங்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஹெளதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியிருந்தனர்.

ஹெளதி கிளர்ச்சியாளர்கள்


ஆனால், இத்தாக்குதலை ஹெளதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்க முடியாது எனவும், ஈரானிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகியன தெரிவித்தன.

இந்நிலையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஹெளதி கிளர்ச்சியளார்களுடன் தான் பேச்சுவர்த்தை நடத்திய வருதவாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

யேமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்காக நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறோம் என சவூதி அரேபிய அதிகாரி ஒருவர் செய்தியளார்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்விரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நiபெறுவதாக சவூதி அரேபியா தெரிவித்தமை இதுவே முதல் தடவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!