தஜிகிஸ்தான் சோதனைச்சாவடியை தாக்கிய ஐ.எஸ். படையினர் 15 பேர் பலி, நால்வர் கைது

0 295

தஜிகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடி ஒன்றை தாக்க வந்த ஐ.எஸ்.இயக்கத்தினரில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் அரச பாதுகாப்புத் தரப்பில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில், உஸ்பெகிஸ்தானுடனான எல்லையிலுள்ள சோதனைச்சாவடி ஒன்றை ஐ.எஸ். இயக்ததினர் இன்று புதன்கிழமை அதிகாலை தாக்கினர். ஐ.எஸ். புடையினரில் சுமார் 20 பேர் இத்தாக்குதலை நடத்தியதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், தஜிகிஸ்தான் அரச பiயினருடனான மோதலில் ஐ.எஸ். புடையினரில் 15 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!