14 கோடி ரூபா பெறுமதியான 1,300 கிலோ எடை கொண்ட எருமை ஹீரோவானது!

0 224

இந்தியாவின் ஜெய்ப்பூரில் இடம்பெற்ற கால்நடைக் கண்காட்சியில் ‘முர்ரா’ இனத்தைச் சேர்ந்த ‘பீம்’ எருமை மாடு ஹீரோவாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் எடை 1,300 கிலோ. ஆறரை வயதைக் கொண்டது. இதன் விலை ரூ.14 கோடி ரூபாவாகும் (இந்திய நாணயப்படி)
இந்த மாட்டுக்கு பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதாந்தம் 1.5 இலட்சம் ரூபா (இந்திய பெறுமதி) செலவாகிறதாம்.

இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லீற்றர் பால், ஒரு கிலோ முந்திரி-பாதாம் ஆகியவற்றைக் கொடுத்து வளர்ப்பதாக அதன் உரிமையாளர் ஜவகர் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!