காற்று மாசு  அதிகரித்ததால்  கோவிலில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி!

Gods In Varanasi Temple Get Anti-Pollution Masks To Avoid Toxic Air

0 1,631

இந்­திய வட மாநி­லங்­க­ளில் காற்று மாசு அதி­க­ரித்­துள்­ளதால்; வாரா­ணா­சியில் உள்ள ஒரு கோவிலில் கடவுள் சிலை­க­ளுக்கு முக­மூடி அணி­விக்­கப்­பட்­டுள்­ளது. வட­இந்­திய நக­ரங்­களில் கடந்த சில ஆண்­டு­க­ளாக காற்று மாசு­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. சுவா­சிக்க முடி­யாத அள­வுக்கு காற்று நஞ்­சாகி வரு­வதால், பொது­மக்கள் கடும் அவ­தி­ய­டைந்து வரு­கி­றார்கள். தலை­நகர் டெல்லி காற்று மாசு­பாட்டால் திண்­டாடி வரு­கி­றது.

 பஞ்சாப், ஹரி­யானா விவ­சா­யிகள் அறு­வ­டைக்­குப்பின் எஞ்சும் பயிரை அதிக அளவில் தீயிட்டு எரிப்­பது வட இந்­திய நக­ரங்­களில் காற்று மாசு அதி­க­ரிப்­ப­தற்கு ஒரு முக்­கிய காரணம் என கூறப்­ப­டு­கி­றது.

காற்று மாசுவால் அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் நக­ரங்­களில் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்தில் உள்ள வார­ணா­சியும் ஒன்று.

இந்­த­நி­லையில், வார­ணா­சியில் சிக்ரா பகு­தியில் பிர­சித்தி பெ

ற்ற சிவ-­பார்­வதி கோவில் உள்­ளது.

காற்று மாசு தீவி­ர­ம­டைந்­துள்­ளதால் இந்த கோவிலில் உள்ள சிவன், துர்கா தேவி, காளி தேவி, சாய் பாபா ஆகிய கடவுள் சிலை­க­ளுக்கு கோவில் அர்ச்­சகர் வெள்ளைத் துணியைக் கொண்டு முக­மூ­டிகள் போல் மூடி­யுள்­ளனர்.

இது குறித்து கோவில் அர்ச்­சகர் ஹரீஷ் மிஷ்ரா கூறு­கையில்,

“தீபா­வளி கொண்­டாட்­டங்­களைத் தொடர்ந்து நக­ரத்தில் காற்று மாசு­பாடு பெரு­ம­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. பொது­வாகக் குளிர்­கா­லங்­களில் காற்று மாசு­பாடு அதி­க­ரிக்கும் என்­பதால் கோவிலில் உள்ள சிலை­க­ளுக்கு முக­மூடி பயன்­ப­டுத்தி சாமி சிலை­களைப் பாது­காப்­பது வழக்கம்.

கடவுள் சிலை­க­ளுக்கு முக­மூடி அணி­வித்­தி­ருப்­பதைப் பார்த்த பிறகு இக்­கோ­வி­லுக்கு வரும் பக்­தர்­களும் முகமூடி அணியத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கை குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!