கொழும்பில் வளி மண்டலத்தின் மாசடைவு வழமையை விட இரு மடங்காக அதிகரிப்பு புதுடெல்லியின் தாக்கமும் காரணம் எனத் தெரிவிப்பு

0 1,306

ரெ.கிறிஷ்­ணகாந்

கொழும்பில் வளி மாச­டை­வா­னது வழ­மையை விட இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வகம் தெரி­வித்­துள்­ளது.

புது­டெல்­லியில் ஏற்­பட்­டுள்ள வளி மாச­டை­வா­னது இந்த வளி மாச­டை­வுக்­கான கார­ணி­களில் ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­வ­தாக தேசியக் கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­கத்தின் சுற்­றாடல் ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விஞ்­ஞானி சரத் பிரே­ம­சிறி தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், வழ­மை­யாக ஒரு சதுர அடிக்கு 50 மைக்ரோ கிராம் என்ற அளவில் காணப்­படும் தூசித் துகள்­களின் அளவு நேற்று பகல்­வே­லையில் 70 மைக்ரோ கிராம் வரை அதி­க­ரித்­தமை இவ்­வாறு வளி மாச­டை­வ­தற்கு காரணம் என்றார்.

இந்த வளி மாச­டைவு தொடர்பில் சுவாச நோயா­ளிகள், சிறு­வர்கள் மற்றும் வயோ­தி­பர்கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்­கு­மாறு சிரேஷ்ட விஞ்­ஞானி சரத் பிரே­ம­சிறி மேலும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, மேல் மற்றும் வட மேல் மாகா­ணங்­களில் தற்­போ­தைய நாட்­களில் ஏற்­பட்­டுள்ள மித­மான மேக மூட்­ட­மான நிலை­மைக்கு இந்த வளி மாச­டைவு காரணமாக என தற்போது ஆராய்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!