அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட வீராங்கனைகளின் சம்பளம் வீரர்களின் சம்பளத்துக்கு நிகராக அதிகரிப்பு!

0 977

அவுஸ்­தி­ரே­லிய மகளிர் கால்­பந்­தாட்ட அணி வீராங்­க­னை­களின் சம்­ப­ளத்தை வீரர்­களின் சம்­ப­ளத்­துக்கு நிக­ராக அதி­க­ரிக்கும் வர­லாறு மிகுந்த ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதற்கு அமைய அதி சிறந்த சிரேஷ்ட வீரர்­க­ளுக்கு போன்றே அதி சிறந்த சிரேஷ்ட வீராங்­க­னை­க­ளுக்கு சம­மான சம்­பளம் வழங்­கப்­படும் என அவுஸ்­தி­ரே­லிய கால்­பந்­தாட்ட சங்கம் தெரி­வித்­தது.

விளை­யாட்­டுத்­துறை பாலின சமத்­துவ விட­யத்தில் இந்த ஒப்­பந்தம் ஒரு மைல் கல்­லாக கரு­தப்­ப­டு­கி­றது,எனினும் ஆண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்டப் போட்­டிளில் பணப்­ப­ரிசு அதிகம் என்­பதால் வீராங்­க­னை­க­ளை­விட கூடுதல் பணத்தை வீரர்கள் சம்­பா­திக்­க­வுள்­ளனர்.

தி மெட்­டில்டாஸ் என அழைக்­கப்­படும் அவுஸ்­தி­ரே­லிய மகளிர் கால்­பந்­தாட்ட அணி பெண்­க­ளுக்­கான உலக கால்­பந்­தாட்ட தர­வ­ரி­சையில் 8ஆவது இடத்தில் இருப்­ப­துடன் ஆண்­க­ளுக்­கான உலக கால்­பந்­தாட்ட தர­வ­ரி­சையில் சொக்­கரூஸ் என்­ற­ழைக்­கப்­படும் அவுஸ்­தி­ரே­லியா 44ஆவது இடத்தில் இருக்­கி­றது.

சம்­பள விட­யத்தில் இரு பாலா­ருக்கும் இடையில் நில­விய பெரிய வித்­தி­யாசம் குறைப்­பட்­டுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய கால்­பந்­தாட்ட சங்­கத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவிட் கெலொப் தெரி­வித்­துள்ளார். புதிய சம்பள முறைமையின் கீழ் சிரேஷ்ட அவுஸ்திரேலிய வீராங்கனைகள் ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் களை சம்பளமாக பெறவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!