இருள் சூழ்ந்திருந்த வவுனியாவுக்குப் போராட்டத்தின் ஊடாக மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்த இளைஞர்கள்

0 389

(ஓமந்தை)

வவு­னி­யாவில் தடைப்­பட்ட மின்­சா­ரத்தை மீண்டும் வழ­மைக்குக் கொண்டு வரு­வ­தற்­காக இரவில் ஒன்று திரண்ட இளை­ஞர்கள் 5 மணி நேரம் போராடிப் பெற்றுக் கொடுத்­துள்­ளனர். வவு­னி­யாவில் மின்­சார சபை ஊழி­யர்கள் திங்­கட்­கி­ழமை பணியின் நிமித்தம் சென்­றி­ருந்­த­போது சிலரால் தாக்­கப்­பட்­டதால் மின்­சார சபை ஊழி­யர்கள் அறுவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

 

இந்த நிலையில் சம்­பவம் இடம்­பெற்ற பிர­தேசம் உட்­பட பல பகு­தி­களில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு மின்­சாரம் தடைப்­பட்­டி­ருந்­தது.  சுமார் 5 மணித்­தி­யா­லங்கள் கடந்தும் மின்­சாரம் கிடைக்­கா­மை­யினால் பிர­தேச இளை­ஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்ட த்தில் ஈடு­பட்­டனர்.

முதலில் ஏ9 வீதியில் இரண்டாம் குறுக்­குத்­தெரு பகு­தியில் வீதியை மறித்து போராட்­டத்­தில ஈடு­பட்­டனர். எனினும் வாக­னங்கள் பிறி­தொரு வீதியால் சென்­ற­தை­ய­டுத்து போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் புதிய பஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். பின்னர் முழு­மை­யாக ஏ9 வீதியின் போக்­கு­வ­ரத்தை தடைப்­ப­டுத்தும் வகையில் போராட்­டத்தில் ஈடு­பட்ட இளை­ஞர்கள் தாண்­டிக்­குளம் சந்­தியில் வீதியை மறித்து போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இந்­நி­லையில், போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து வவு­னி­யாவின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள் தாண்­டிக்­குளம் சந்­திக்கு படை­யெ­டுத்­தனர். இதனால் போராட்டம் உச்சம் பெற்­றது. ஏ9 வீதி மறிக்­கப்­பட்­ட­மை­யினால் அதி­க­ளவு வாக­னங்கள் தென் பகு­தியை நோக்­கியும் வட பகு­தியை நோக்­கியும் செல்ல முடி­யாது பன்­றிக்­கெய்­த­குளம் வரையும் மறு­மு­னையில் மூன்­று­மு­றிப்பு வரையும் தரித்து நின்­றன.

எனினும் மின்­சார சபை ஊழி­யர்கள் இவ்­வி­ட­யத்தில் கரி­சனை காட்­டாத நிலையில் வவு­னியா பொலிஸார் நிலைமை யை உணர்ந்து உட­னடி நட­வ­டிக்­கையில் இறங்­கினர். மின்­சார சபை ஊழி­யர்­களின் வீடு­க­ளுக்குச் சென்று நிலை­மையை பொலிஸார் தெளி­வு­ப­டுத்­தினர்.

எனினும் அவர்கள் தாம் பணிக்குச் செல்­வதில் அச்சம் உள்­ளதால் தம்மால் செல்ல முடி­யாது எனவும் சிலர் குறித்த பகு­திக்­கு­ரிய வேலை­யாட்கள் பணியில் தற்­போது இல்லை எனவும் பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து வவு­னியா பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு மின்­சார சபை ஊழி­யர்கள் சிலரை தமது வாக­னத்தில் பாது­காப்­புடன் அழைத்துச் சென்று மின்­சா­ரத்தை சீர் செய்யும் முயற்­சியில் ஈடு­ப­டுத்­தினர். 

இந்­நி­லையில் ஏ9 வீதியின் போக்­கு­வ­ரத்து முடங்­கிய நிலையில், ரயில் பாதையை வழி மறிக்க ஒன்று திரண்ட இளை­ஞர்கள், தாண்­டிக்­குளம் சந்­தியில் ரயில் பாதையில் வெளிச்­சத்தை பாய்ச்சி ரயில் சார­திக்கு சமிக்ஞை காட்­டி­ய­தை­ய­டுத்து ரயில் நிறுத்­தப்­பட்­டது. பின்னர் ரயில் பாதையில் சீமெந்­தி­லா­லான ‘போக்’ ஒன்றை குறுக்­காக இட்­ட­துடன் ரயில் என்­ஜினில் ஏறி அமர்ந்து கொண்­டனர். இதனால் சுமார் ஒரு மணி நேர­மாக ரயில் தனது பய­ணத்தை தொடர முடி­யாத நிலை­யேற்­பட்­டது.

இவ்­வா­ற­ன­தொரு நிலையில் போராட்டம் 5 மணித்­தி­யா­லங்­க­ளையும் கடந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது பொலி­ஸாரால் அழைத்து வரப்பட்ட மின்சார சபை ஊழியர்கள் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சாரத்தை மீள வழங்கினர்.இத­னை­ய­டுத்து இளை­ஞர்கள் தமது போராட்­டத்தை இரவு 1 மணி­ய­ளவில் நிறை­வுக்­கொண்டு வந்­த­தனர். பின்னர் ஏ9 வீதி­யி­லான போக்­கு­வ­ரத்து மற்றும் ரயில் போக்­கு­வ­ரத்தும் வழமைக்கு திரும்பின.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!