பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தினேஷ் இலங்கை அணிக்கு தலைமைதாங்குகிறார்

0 431

(நெவில் அன்­தனி)

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் துபாய் விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மாகும் ஒன்­ப­தா­வது உலக பரா மெய்­வல்­லுநர் போட்­டி­களில் ரியோ 2016 பரா­லிம்­பிக்கில் பதக்கம் வென்ற தினேஷ் ப்ரியன்த ஹேரத் தலை­மை­யி­லான 9 பரா மெய்­வல்­லு­நர்கள் இலங்கை சார்­பாக பங்­கு­பற்­று­கின்­றனர்.

இலங்கை பரா மெய்­வல்­லு­நர்கள் குழுமம் நேற்றுமுன்­தினம் துபாய் சென்­ற­டைந்­தது.

ஜப்­பானின் டோக்­கி­யோவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள பரா­லிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான தகு­திகாண் போட்­டி­யா­கவும் பரா மெய்­வல்­லுநர் போட்­டிகள் அமை­வதால் இலங்கை பரா மெய்­வல்­லு­நர்கள் தங்­க­ளா­லான அதி­க­பட்ச ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­பெற முயச்­சிப்பர் என நம்­பு­வ­தாக இலங்கை பரா­லிம்­பிக் குழு தலைவர் மேஜர் ஜெனரல் ரஜித்த அம்ப்­பே­மொ­ஹொட்டி இங்­கி­ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் தெரி­வித்தார்.

ரியோ பரா­லிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஆண்­க­ளுக்­கான எவ் 16 பிரிவு ஈட்டி எறிதல் போட்­டியில் வெண்­கலப் பதக்கம் வென்ற தினேஷ் ப்ரியன்த, உலக பரா மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளிலும் இதே நிகழ்ச்­சியில் பங்­கு­பற்றி பதக்கம் வெல்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தோ­னே­சி­யாவின் ஜகார்த்­தாவில் கடந்த வருடம் நடை­பெற்ற பரா ஆசிய விளை­யாட்டு விழாவில் இலங்­கைக்கு 14 பதக்­கங்கள் மொத்­த­மாக கிடைத்­தி­ருந்­தது.

எனினும் உலக பரா­மெய்­வ­ல­்லுநர் போட்­டி­களில் கடும் சவால் நில­வு­வதால் இலங்கை பரா மெய்­வல்­லு­நர்கள் பதக்கம் வெல்­வ­தாக இருந்தால் அதி­கப்­பட்ச ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­த­வேண்­டி­வரும்.துபாய் விளை­யாட்­ட­ரங்கில் இன்று முதல் எதிர்­வரும் 15ஆம் திக­தி­வரை நடை­பெறும் 9ஆவது உலக பரா மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 118 நாடு­களைச் சேர்ந்த சுமார் 1,400 பரா மெய்­வல்­லு­நர்கள் 162 வகை­யான நிகழ்ச்­சி­களில் தங்கப் பதக்­கங்­க­ளுக்­காக போட்­டி­யி­ட­வுள்­ளனர்.

இலங்கை பரா மெய்­வல்­லுநர் அணி­யி­ன­ருக்கு பூரண அனு­ச­ர­ணையை டயலொக் ஆசி­யாட்டா நிறு­வனம் வழங்­கி­யுள்­ளது.

தேசிய கிரிக்கெட், றக்பி, கரப்­பந்­தாட்டம், வலை­பந்­தாட்ட அணி­களின் பெருமை மிகு அனு­ச­ர­ணை­யா­ளர்­க­ளாக டயலொக் ஆசி­யாட்டா விளங்­கு­கின்­றது. அத்­துடன் ஜனா­தி­பதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், கழக றக்பி லீக், க்ளிபர்ட் கிண்ண றக்பி, கனிஷ்ட மற்றும் தேசிய வலைபந்தாட்டம், சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் ஆகியவற்றுக்கும் டயலொக் ஆசியாட்டா அனுசணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!