நவாலியில் 60 பவுண் தங்க நகைகள் கொள்ளை: நால்வர் கைது!

0 1,374

                                                                                                                                      (தி.சோபிதன்)
யாழ் குடாவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய  சந்தேகத்தில் நால்வர் கோப்பாயில் வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலியில் திருமண வீடு ஒன்றில் புகுந்து காணொளியைக் காண்பித்து 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து தண்டனைக் காலம் நிறைவடைந்து சிறையிலிருந்து வெளிவந்த பின்பும் கொள்ளைகளில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று சந்தேக நபர்கள் நால்வரும் மறைந்திருந்தப்பதாகக்  கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை முற்றுகையிட்ட கோப்பாய் பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதி கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலும் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!