ஐ.பி.எல்லில் விதிமீறிய பந்துகளை அறிவிக்க புறம்பான மத்தியஸ்தர்

0 413

இண்­டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது விதி மீறிய பந்­து­களை (நோ-போல்) அறி­விப்­ப­தற்­கென புறம்­பான மத்­தி­யஸ்­தர்­களை நிய­மிப்­ப­தற்கு இண்­டியன் ப்றீமியர் லீக் நிரு­வாகக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்கு அமைய விதி மீறிய பந்­து­க­ளுக்­காக தொலைக்­காட்சி மத்­தி­யஸ்தர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.

இவ் வருடம் நடை­பெற்ற இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது விதி மீறிய பந்­துகள் தொடர்பில் அடிக்­கடி சர்ச்­சைகள் எழுந்­தன. குறிப்­பாக பெங்­க­ளூரு றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இண்­டியன்ஸ் அணிக்கும் இடையில் நடை­பெற்ற போட்­டியில் லசித் மாலிங்­கவின் கடைசிப் பந்து விதி மீறிய பந்­தாக (நோ-போல்) அறி­விக்­கப்­ப­டா­தது பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­தது.

மும்பை இண்­டி­யன்­ஸுக்கு எதி­ரான போட்­டியில் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு கடைசிப் பந்தில் வெற்­றிக்கு 7 ஓட்­டங்கள்  தேவைப்­பட்­டது. மும்பை வேகப்­பந்து வீச்­சாளர் மாலிங்க புல்­டா­சாக வீசிய கடைசிப் பந்தை எதிர்­கொண்ட றோயல் செலஞ்சர்ஸ் வீரர் ஷிவம் துபே­யினால் ஓட்டம் எடுக்க முடி­யாமல் போன­துடன் அவ­ரது அணி தோல்­வியைத் தழு­வி­யது.

ஆனால்,  தொலைக்­காட்சி சலன அசை­வு­களில் மாலிங்­கவின் முன்­னங்கால் துடுப்­பாட்டக் கோட்­டுக்கு வெளியெ இருப்­பது தெரி­ய­வந்­தது. ஆனால், இதனை மத்­தி­யஸ்தர் கவ­னிக்­காமல் விட்டு விட்டார்.

இதனை அடுத்து மத்­திஸ்­த­ருடன் றோயல் செலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராத் கோஹ்லி கடும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட நேரிட்­டது.

அத்­துடன் ஜெய்­பூரில் நடை­பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதி­ரான போட்­டியின் கடைசி ஓவரில் இடுப்பு உய­ரத்­துக்கு மேலாக வீசப்­பட்ட பந்து, விதி மீறிய பந்­தாக அறி­விக்­கப்­ப­டா­தது குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி மைதா­னத்­துக்குள் சென்று மத்­தி­யஸ்­தர்­க­ளுடன் கார­சா­ர­மான வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

இத்­த­கைய சம்­ப­வங்­களை இண்­டியன் ப்றீமியர் லீக் போட்­டி­களில் தவிர்க்கும் வகை­யி­லேயே விதி மீறிய பந்­து­களைப் பிடிப்­ப­தற்கு தொலைக்­காட்சி மத்­தி­யஸ்­தரை நிய­மிக்க பிர்தேஷ் பட்டேல் தலை­மை­யி­லான ஐ.பி.எல். நிரு­வாகக் குழு கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தொலைக்­காட்சி மத்­தி­யஸ்தர், தொழில்­நுட்ப உத­வி­யுடன் ஒவ்­வொரு பந்­தையும் உன்­னிப்­பாக கண்­கா­ணித்து அது விதி­மீ­றிய பந்­தாக இருந்தால் உட­ன­டி­யாக அதை கள மத்­தி­யஸ்­தர்­களின் கவ­னத்­துக்கு கொண்டு செல்வார். அவர் மூன்­றா­வது மத்­தி­யஸ்தர் போல் செயற்­ப­ட­மாட்டார்.

அத்­துடன் ஐ.பி.எல். போட்­டியில் சுவா­ரஸ்­யத்தை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­காக ஏதா­வது ஒரு கட்­டத்தில் மாற்று வீரர் ஒரு­வரை துடுப்­பாட்ட வீர­ரா­கவோ, பந்­து­வீச்­சா­ள­ரா­கவோ பயன்­ப­டுத்தும் ‘பவர் பிளேயர்’ முறைமை குறித்தும் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது.

இந்த வித்­தி­யா­ச­மான முறை­மையை பரீட்­சார்த்­த­மாக நடை­மு­றைப்­ப­டுத்த போதிய கால­அ­வ­காசம் இல்­லா­ததால் இப் ­போ­தைக்கு இந்த திட்­டத்தை கைவி­டு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!