பணத்தை திருப்பி கேட்டதால் சயனைட் கொடுத்து 10 பேரை கொன்ற ‘மந்திரவாதி’

0 685

கொடுத்த பணத்தை திருப்பி கேட்­டதால் சயனைட் விஷம் கொடுத்து 10 பேரை கொன்­ற­தாகக் கூறப்­படும் மந்­தி­ர­வா­தியை இந்­தி­யாவின் ஆந்­திர மாநில பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

வேலங்கி சிம்­ஹாத்ரி

சிவா என அழைக்­கப்­படும் வேலங்கி சிம்­ஹாத்ரி எனும் 38 வய­தான நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இவர் 2018 பெப்­ர­வரி மாத­த­்துக்கும் கடந்த ஒக்­டோபர் 16 ஆம் திக­திக்­கும்­இ­டைப்­பட்ட காலத்தில் இக்­கொ­லை­களை செய்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆந்­தி­ராவின் மேற்கு கோதா­வ­ரி யில் உள்ள எலுரு பகு­தியை சேர்ந்­த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் அவ­ருக்கு பெரும் நஷ்டம் ஏற்­பட்­டது.

இதனால் மோச­டியில் ஈடு­பட முடிவு செய்த அவர் தன்­னிடம் மந்­திர சக்­திகள் இருப்­ப­தாக கூறி அப்­ப­குதி மக்­களை ஏமாற்றி வந்­துள்ளார் என அதி­கா­ரிகள் தெரி­வித்துள்ளனர்.

தன்­னிடம் பணம் கொடுத்தால் மந்­திர பூஜைகள் செய்து அதனை இரட்­டிப்­பாக்கி தரு­வ­தாக வேலங்கி சிம்­ஹாத்ரி கூறி உள்ளார். இதை நம்­பிய சிலர் அவ­ரிடம் லட்­சக்­க­ணக்கில் பணம் மற்றும் நகையை கொடுத்­துள்­ளனர்.

தன்னை மந்­தி­ர­வாதி என மக்கள் நம்ப வேண்டும் என்­ப­தற்­காக வீட்டு அறையில் இரட்டைத் தலை பாம்பு போன்­ற­வற்றை வைத்து பூஜை செய்­துள்ளார் வேலங்கி சிம்­ஹாத்ரி. தன்னால் நீர­ிழிவு நோயை குணப்­ப­டுத்த முடியும் என கூறியும் பல­ரிடம் நூதன மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார்.

பல நாட்­க­ளா­கியும் அவர் பணத்தை கொடுக்­க­வில்லை. இதனால் பணம் கொடுத்­த­வர்கள் திருப்பி கேட்­டனர். ஒரு சிலரை சமா­ளித்த சிவா, சில­ருக்கு பிர­சா­தத்தில் சயனைட் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்­துள்ளார். பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உடலில் எந்த காயங்­களும் இல்­லாததால் அவர்கள் இயற்­கை­யாக இறந்து விட்­ட­தாக கருதி உள்­ளனர்.

சமீ­பத்தில் அப்­ப­கு­தியை சேர்ந்த உடற்­கல்வி ஆசி­ரி­ய­ரான நாக­ராஜூ என்­பவர் ரூ.2 லட்சம் நகை, பணத்­துடன் மாய­மாகி விட்­ட­தாக அவ­ரது சகோ­தரர் வெங்­க­ட­ர­மணா பொலி­ஸா­ரிடம் புகார் கொடுத்தார். நாக­ரா­ஜூ வின் தொலை­பேசி மற்றும் சில சி.சி.ரி.வி. .காட்­சிகள் மூலம் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

இதில் பொலி­ஸா­ரிடம் சிவா எனும் வேலங்கி சிம்­ஹாத்ரி. சிக்­கினார். விசா­ர­ணையில் நாக­ரா­ஜூவை கொலை செய்­ததை அவர் ஒப்­புக்­கொண்டார். மேலும் தனது பாட்டி, மைத்­துனர் மற்றும் அதே பகு­தியை சேர்ந்த நில உரி­மை­யாளர், மத போதகர் உட்­பட மொத்தம் 10 பேருக்கு சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்­த­தாக கூறினார்.

வி.உமா­ம­கேஷ்­வரா, பி. தவி­தையா, கே.பீ. வெங்­க­டேஷ்­வரா, ஜி.வி. வெங்­கட பாஸ்­கரா, ராம­கி­ருஷ்­ணா­னந்த சுவா­மிஜி, கே. ராக­வம்மா, சமந்­தா­குர்தி நாக­மணி, எம். ராமு­லம்மா, கேதி நாக­ராஜு ஆகி­யோரே கொல்­லப்­பட்­ட­வர்கள் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பெப்­ர­வரி முதல் 20 மாதங்­களில் இந்த கொலை­களை தனி ஆளாக செய்­துள்ளார்.

கைதுசெய்­யப்­பட்­ட­வர்கள் மற்றும் கைப்­பற்றப்பட்ட பொருட்­க­ளுடன் பொலிஸார்

 

இவர் இது­வரை 25 லட்சம் இந்­திய ரூபா பணம் மற்றும் 35 பவுன் நகை மோசடி செய்­தமை விசா­ர­ணையில் தெரிய வந்­தது. வேலங்கி சிம்­ஹாத்­ரி யின் தொலை­பே­சியை பொலிஸார் ஆய்வு செய்­தனர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களின் இலக்கங்கள் இருந்தன.

தொடர்ந்து நடந்த விசா­ர­ணையில் சிவா தன்­னிடம் பணம் மற்றும் நகை கொடுத்து ஏமாந்த மேலும் 20 பேரை கொலை செய்ய திட்­ட­மிட்­டதும் அம்­ப­ல­மா­னது. அவ­ருக்கு சயனைட் விநி­யோ­கித்­தா­ரெனக் கூறப்­படும் 60 வய­தான அமீ­னுல்லா பாபு என்­ப­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தொடர்ந்து விசா­ரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!