இலங்கை இளையோர் அணியை மீட்ட தனஞ்சயவின் ‘மரதன்’ துடுப்பாட்டம்

0 67

பங்­ளா­தே­ஷுக்கு எதி­ராக குல்னா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இரண்­டா­வது இளையோர் (19 வயதின் கீழ்) நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியை இலங்கை வெற்­றி­ தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது.

அணித் தலைவர் நிப்புன் தனஞ்­சய 8 மணித்­தி­யா­லங்கள் பொறு­மை­யுடன் துடுப்­பெ­டுத்­தா­டி­யதன் பல­னாக தோல்­வியின் விளிம்­பி­லி­ருந்து 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி காப்­பாற்­றப்­பட்­டது.

முத­லா­வது இன்னிங்ஸ் நிறைவில் பங்­க­ளா­தே­ஷை­விட 162 ஓட்­டங்கள் பின்­னி­லையில் இருந்த இலங்கை இளையோர் அணி, இரண்­டா­வது இன்­னிங்ஸில் நிதா­னத்­து­டனும் பொறப்­பு­ணர்­வு­டனும் துடுப்­பெ­டுத்­தாடி 346 ஓட்­டங்­களைக் குவித்­தது.

நிப்புன் தனஞ்­சய, சொனால் தினுஷ ஆகிய இரு­வரும் அரைச் சதங்கள் பெற்­ற­துடன் மேலும் மூவர் 30க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றனர்.

177 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் இளையோர் அணி 3 விக்­கெட்­களை இழந்து 37 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்­த­போது ஆட்டம் முடி­வுக்கு வந்­தது.

எண்­ணிக்கை சுருக்கம்
19இன் கீழ் இலங்கை அணி 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 184 (குஷான் விக்­ர­ம­சிங்க 73, லக்ஷான் கமகே 47, ஷஹின் அலாம் 62–7 விக்.)19இன் கீழ் பங்­க­ளாதேஷ் அணி 1ஆவது இன்: சக­லரும் ஆட்­ட­மி­ழந்து 354 (நவ்ரோஸ் நபில் 98, அல்வி ஹக் 72, ஷஹாடத் ஹொசென் (3) 50, நிப்புன் தனஞ்­சய 35–4 விக்.)19இன் கீழ் இலங்கை அணி 2ஆவது இன்: 346–9 விக். டிக்­ளயார்ட் (நிப்பன் தனஞ்­சய 81, சொனால் தினுஷ 55, துலித் வெல்­லா­லகே 45, லக்ஷான் கமகே 45, ரவிந்து ரசன்த 33, மெஹெதி ஹசன் (2) 52–3 விக்.)
19இன் கீழ் பங்களாதேஷ் அணி: 2ஆவது இன்: ஆட்டநேர முடிவில் 37–3 விக். (அம்ஷி டி சில்வா 10–2 விக்.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!