தெற்காசிய நீச்சலுக்கான இலங்கை குழாம் உபாதை காரணமாக கிமிக்கோ விலகினார்: நீச்சல் அணிக்கு மெத்யூ அபேசிங்க தலைவர்

0 90

(நெவில் அன்­தனி)

நேபா­ளத்தின் தலை­நகர் கத்­மண்­டு­விலும் பொக்­கா­ரா­விலும் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான இலங்கை நீச்சல் குழாத்தில் இடம்­பெ­ற­வி­ருந்த நட்­சத்­திர நீச்சல் வீராங்­கனை கிமிக்கோ ரஹிம் கடைசி நேரத்தில் உபாதை கார­ண­மாக வில­கிக்­கொண்­டுள்ளார்.

கிமிக்கோ ரஹிம்

 

எதிர்­வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திக­தி­ முதல் 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா நீச்சல்
போட்­டி­க­ளுக்கு முன்­னோ­டி­யாக கொழும்பு சுக­த­தாச நீச்சல் தடா­கத்தில் ஒரு வாரத்­துக்கு முன்னர் நடை­பெற்ற திறன்காண் போட்­டி­களைத் தொடர்ந்து நீச்சல் குழாம் நேற்­று­முன்­தினம் பெய­ரி­டப்­பட்­டது.

மெத்யூ அபே­சிங்க

 

எனினும் கிமிக்கொ ரஹீமின் மணிக்­கட்டில் ஏற்­பட்ட உபாதை கார­ண­மாக அவரை குழாத்தில் சேர்த்­துக்­கொள்­ள­வில்லை என இலங்கை நீர்­நிலை விளை­யாட்­டுத்­துறை சங்கப் பிர­தி­நிதி ஒருவர் தெரி­வித்தார்.

இம் முறை தெற்­கா­சிய விளை­யாட்டு விழா நீச்சல் போட்­டி­களில் இலங்­கை­யி­லி­ருந்து 10 வீரர்­களும் 6 வீராங்­க­னை­களும் பங்­கு­பற்­று­கின்­றனர்.

டி. அக்­க­லன்க பீரிஸ்

 

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் குவா­ஹாட்­டியில் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா நீச்சல் போட்­டி­களில் பெண்கள் பிரிவில் 5 தங்கப் பதக்­கங்­க­ளையும் ஒரு வெள்ளிப் பதக்­கத்­தையும் வென்ற கிமிக்கோ, நீச்சல் குழாத்தில் இடம்­பெ­றா­தது இலங்கை அணிக்கு பேரி­ழப்­பாக அமைந்­துள்­ளது.

அனிக்கா கபூர்

 

அவ­ருக்குப் பதி­லாக அவ­ரது நிகழ்ச்­சி­க­ளுக்­காக வேறு இரு­வரை தெரிவு செய்­வது குறித்து சங்கம் ஆலோ­சித்­து­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, தெற்­கா­சிய நீச்சல் போட்­டி­களில் இலங்கை சார்பாக அதிக பதக்­கங்­களை வென்­ற­வ­ரான மெத்யூ அபே­சிங்க, இலங்கை நீச்சல் அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

2016 தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் ஆண்­க­ளுக்­கான நீச்சல் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய மெத்யூ அபே­சிங்க 7 தங்கப் பதக்­கங்கள் உட்­பட 10 பதக்­கங்­களை வென்­றி­ருந்தார்.

அத்­துடன் நீச்­சலில் பெரும் முன்­னேற்றம் கண்­டு­வரும் டி. அக்­க­லன்க பீரிஸும் இலங்கை நீச்சல் குழாத்தில் இடம்­பெ­று­கின்றார்.

இலங்கை நீச்சல் குழாம்ஆண்கள்: மெத்யூ அபே­சிங்க, டி. அக்­க­லன்க பீரிஸ், கவிந்த்ர நுக­வெல, டி. ஷெஹான், ஷெவிந்த டி சில்வா, கிரான் ஜாசிங்க, செரன்த டி சில்வா, சந்தீவ் சென­ரத்ன, ரெவான் சென­ரத்ன, ஸ்டேவான் பெரேரா. தயார்நிலை வீரர் கவின் வீரசிங்க.

பெண்கள்: பக்தி கருணாசேன, ரமுதி சமரகோன், கங்கா செனவிரட்ன, அனிக்கா கபூர், சந்து சவிந்து, ஷஸ்னா மாஹிர். தயார்நிலை வீராங்கனை: ஹிருக்கி டி சில்வா.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!