விளையாட்டு விழா ஏற்பாடுகளை ஆராய இலங்கை குழுவினர் நேபாளம் பயணம்

0 43

அங்­கு­ரார்ப்­பண தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவை அரங்­கேற்­றிய நேபா­ளத்தில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான ஏற்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தற்கு இலங்­கையின் தேசிய ஒலிம்பிக் குழு செய­லா­ளர்­நா­யகம் மெக்ஸ்வெல் டி சில்வா தலை­மை­யி­லான பிர­தி­ நி­திகள் எதிர்­வரும் சனிக்­கி­ழமை அங்கு பய­ண­மா­க­வுள்­ளனர்.

13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கத்­மண்­டு­விலும் பொக்­கா­ரா­விலும் எதிர்­வரும் டிசம்பர் 1ஆம் திக­தி­யி­லி­ருந்து 10ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

விளை­யாட்டு விழா­வுக்­கான ஏற்­பா­டுகள், போட்­டிகள் நடை­பெறும் இடங்கள் மற்றும் மைதா­னங்கள் குறித்து அறிந்­து­கொள்­வ­தற்­கா­கவே இலங்கை குழு­வினர் அங்கு செல்­ல­வுள்­ளனர்.

குறிப்­பாக இவ் வருடம் ஏப்ரல், மே மாதங்­களில் இடம்­பெற்ற பூமி அதிர்ச்­சி­யினால் கத்­மண்டு தசரத் விளை­யாட்­ட­ரங்கில் சில பகு­திகள் சேத­ம­டைந்­தன. அவற்றைத் திருத்தும் பணிகள் மும்­மு­ர­மாக நடை­பெற்­று­வ­ரு­கின்­றன.

அவற்றை பார்­வை­யிடும் மெக்ஸ்வெல் டி சில்வா தலை­மை­யி­லான குழு­வினர், இலங்கை வீர, வீராங்­க­னைகள், அதி­கா­ரிகள் தங்­க­வுள்ள ஹோட்­டல்­க­ளையும் பார்­வை­யி­ட­வுள்­ளனர்.

இவ்­வ­ருட தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ், பூட்டான், இந்­தியா, மாலை­தீ­வுகள், பாகிஸ்தான், இலங்கை, வர­வேற்பு நாடான நேபாளம் ஆகிய எட்டு நாடுகள் 28 வகை­யான விளையாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்­ளன.

இலங்­கை­யி­லி­ருந்து 650 வீர, வீராங்­க­னை­களும் பயிற்­று­நர்கள், மருத்­து­வர்­க­ளுடன் சுமார் 200 நுட்­ப­வியல் அதி­கா­ரி­களும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­காக நேபாளம் செல்­ல­வுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் இந்தத் தொகை குறை­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இம் முறை தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை விளை­யாட்டுக் குழுக்கள் தெரிவு செய்­யப்­பட்டு விட்­ட­தா­கவும் அவற்­றுக்­கான பெயர் விப­ரங்கள் தங்­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செய­லாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா கூறினார்.

இந்­தி­யாவின் குவா­ஹாட்­டியில் நடை­பெற்ற 2016 தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்­கைக்கு 25 தங்கப் பதக்­கங்கள், 63 வெள்ளிப் பதக்­கங்கள், 98 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

இம்­முறை அத­னை­விட கூடுதல் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்­துள்­ள­தாக விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தித் திணைக்­கள பணிப்­பா­ளர்­நா­யகம் தம்­மிக்க முத்­து­கல தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. (என.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!