போதைப்பொருட்களைக் கடத்திய நெதர்லாந்து ஒலிம்பிக் வீராங்கனைக்கு சிறை

0 121

போதைப்பொருள் கடத்­தலில் ஈடு­பட்டு குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நெதர்­லாந்தின் ஒலிம்பிக் மெய்­வல்­லுநர் வீராங்­கனை மாதியா கபூ­ருக்கு எட்­டரை மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பெண்­க­ளுக்­கான 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்­டி யில் நெதர்­லாந்து சார்­பாக பங்­கு­பற்­றி­ய­வ­ராவார்.

ஜேர்­ம­னியின் எல்டென் என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் நடத்­தப்­பட்ட வழ­மை­யான எல்­லைப்­புற சோத­னை­யின்­போது மாதி­யாவின் காரின் அடிப்­பா­கத்­தி­லி­ருந்து 2 மில்­லியன் பவுண்ட்கள் பெறு­ம­தி­யான போதைப்பொருள் பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டது.

அவ­ரிடம் இருந்து 50 கிலோ கிராம் எடை­யு­டைய மெய்­ம­றந்து இன்பம் அனு­ப­விப்­ப­தற்­கான வில்­லைகள், 2 கிலோகிராம் எடை­யு­டைய போதைத் தூள், 11,950 யூரோ நாணயம் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன.

ஜேர்மன் நீதி­மன்­றத்தின் தீர்ப்பை அடுத்து மாதியா கபூரின் நடத்­தையை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக நெதர்­லாந்து மெய்­வல்­லுநர் ஒன்­றியம் தெரி­வித்­தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்­முறை­யீடு செய்­யப்­போ­வ­தாக மாதியா கபூர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் ஊக்­க­ம­ருந்­து­களை கொண்டு செல்­வ­தாக தான் நினைத்­த­தா­கவும் போதைப்பொருளை கொண்டு செல்லப்படுவதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் நீதிமன்ற விசாரணையின்போது அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!