யேமன் அரசுக்கும் தென் பகுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்து

வட பகுதி ஹெளதி கிளர்ச்சியாளர்களுடன் சவூதி அரேபியா பேச்சுவார்த்தை

0 893

யேமன் அர­சுக்கும் அந்­நாட்டின் தென் பகு­தியில் உள்ள பிரி­வி­னை­வாத கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் சமா­தான ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்டுள்ளது.

 

அதி­கார பகிர்­வுக்­கான இந்த ஒப்­பந்தம் சவூதி அரே­பி­யாவின் மத்­தி­யஸ்­தத்­துடன் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது,
அதே­வேளை, யேமனின் வட பகு­தி­யி­லுள்ள ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுடன் தான் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக சவூதி அரே­பியா நேற்று அறி­வித்­துள்­ளது.

யேமனின் தென்­ப­குதி பிரி­வி­னை­வா­திகள், யேமன் அர­சுக்கு எதி­ராகச் போரிட்டு வந்­தனர். தென் யேமனை தனி நாடாக்­கு­வ­தற்­காக அவர்கள் போரிட்­டனர். அக்­கி­ளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் ஆத­ரவு அளித்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நேற்றுமுன்தினம் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
யேமனின் துணைப் பிரதமர் சலேம் அல் கான்பாஷியும், யேமனின் தெற்கு இடைக்கால கவுன்ஸலின் அங்கத்தவரும் ஏடனின் முன்னாள் ஆளுநருமான நசீர் அல் காப்ஜியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

யேமன் ஜனாதிபதி மன்சூர் ஹாதி, சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், அபதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் மொஹம்மத் பின் ஸயீட் அல் நஹ்யான் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்த ஒப்­பந்­தம் குறித்து சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மத் பின் சல்மான் சவூதி அரசு தொலைக்­காட்­சியில் அறி­வித்தார். இது குறித்து அவர் கூறு­கையில் ‘யேமனில் நான்கு ஆண்­டு­க­ளாகத் தொடரும் போருக்கு அர­சி­யல்­ரீ­தி­யாக முக்­கியத் தீர்­வாக இந்த ஒப்­பந்தம் உள்­ளது. இந்த ஒப்­பந்தம் மூலம் ஏமனில் புதிய சூழல் உரு­வாகும். சவுதி அரே­பியா உங்­க­ளுடன் துணை நிற்­கி­றது. இது ஒரு மகிழ்ச்­சி­க­ர­மான நாள்’ என்றார்.

ஹெளதி கிளர்­சி­யா­ளர்­க­ளுடன் சவூதி அரே­பியா பேச்­சு­வார்த்தை

யேமனின் வட பகு­தி­யி­லுள்ள ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுடன் தான் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக சவூதி அரே­பியா நேற்று அறி­வித்­தது. யேமனின் சுன்னி பிரிவைச் சேர்ந்த ஜனா­தி­பதி மன்சூர் ஹைதிக்கு ஆத­ர­வான படை­க­ளுக்கும், வட பகு­தி­யி­லுள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்­நாட்டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது.

இதில் ஜனா­தி­பதி மன்சூர் ஹாதிக்கு ஆத­ர­வாக சவூதி அரே­பியா செயல்­ப­டு­கி­றது ஹெளதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆத­ரவு அளிக்­கி­றது. யேமன் அர­சுக்கு ஆத­ர­வாக ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மீது சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்டுப் படைகள் தாக்­குதல் நடத்தி வரு­கின்­றன.

அண்­மையில் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள ஆராம்கோ நிறு­வ­னத்தின் இரு எண்ணெய் நிலை­யங்கள் மீது பாரிய தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இத்­தாக்­கு­த­லுக்கு ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்கள் உரிமை கோரி­யி­ருந்­தனர்.

ஆனால், இத்­தாக்­கு­தலை ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­தி­யி­ருக்க முடி­யாது எனவும், ஈரா­னி­லி­ருந்தே தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் அமெ­ரிக்கா மற்றும் சவூதி அரே­பியா ஆகி­யன தெரி­வித்­தன.இந்­நி­லையில் மோதலை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக ஹெளதி கிளர்ச்­சி­ய­ாளர்­க­ளுடன் தான் பேச்­சு­வர்த்தை நடத்­தி வரு­த­வாக சவூதி அரே­பியா தெரி­வித்­துள்­ளது.

யேமனில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உத­வு­வ­தற்­காக நாம் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யாடி வரு­கிறோம் என சவூதி அரே­பிய அதி­காரி ஒருவர் செய்­தி­ய­ாளர்­க­ளிடம் நேற்று தெரி­வித்­துள்ளார். இவ்­விரு தரப்­புக்கும் இடையில் சமா­தான பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக சவூதி அரே­பியா அறி­வித்­தமை த்தமை இதுவே முதல்தடவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!