சிங்கர் எம்.சி.ஏ.ப்றீமியர் லீக் கிரிக்கெட் எல். பி. பினான்ஸ் அணி சம்பியன்

0 39

(நெவில் அன்­தனி)

வர்த்­தக கிரிக்கெட் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள 27ஆவது சிங்கர் எம்.சி.ஏ. ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டியில் எல். பி. பினான்ஸ் அணி சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொண்­டது.

இது­வரை நடைபெற்று முடிந்­துள்ள 19 லீக் போட்­டி­களின் அடிப்­ப­டையில் ஒரு போட்­டியில் தானும் தோல்வி அடை­யாத எல். பி. பினான்ஸ் அணி 3 போனஸ் புள்­ளி­க­ளுடன் மொத்­த­மாக 21 புள்­ளி­களைப் பெற்று லீக் சம்­பியன் படத்தை உறு­தி­செய்­து­கொண்­டுள்­ளது.

எல். பி. பினான்ஸ் அணி விளை­யாடிய 6 போட்­டி­களில் மூன்றில் வெற்­றி­பெற்­றுள்­ள­துடன் 3 போட்­டி­களில் மழை கார­ண­மாக முடி­வு­கிட்­ட­வில்லை.

பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் ஹேலீஸ் குறூப் ‘ஏ’ அணியை 8 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டதான் மூலம் எல். பி. பினான்ஸ் அணி சம்­பியன் பட்­டத்தை உறு­தி­செய்­து­கொண்­டது.
சரித் அச­லன்க, லக்ஷான் ரொட்­றிகோ ஆகி­யோரின் துடுப்­பாட்­டங்­களும் லஹிரு குமா­ரவின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சும் எல். பி. பினான்ஸ் அணியின் வெற்­றிக்கு அடி­கோ­லின.

ஹேலீஸ் 27.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 104 ஓட்­டங்­களைப் பெற்­றது. துடுப்­பாட்­டத்தில் சச்­சித்ர சேர­சிங்க 26 ஓட்­டங்­களைப் பெற்றார். பந்­து­வீச்சில் லஹிரு குமார 6 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் ஷெஹான் ஜய­சூ­ரிய 26 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய எல்.பி. பினான்ஸ் அணி 16.3 ஓவர்­களில் 2 விக்­கெட்­களை இழந்து 105 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. துடுப்­பாட்­டத்தில் சரித் அச­லன்க ஆட்­ட­மி­ழக்­காமல் 42 ஓட்­டங்­க­ளையும் லக்ஷான் பெர்­னாண்டோ 33 ஓட்­டங்­க­ளையும் தனஞ்­சய டி சில்வா ஆட்­ட­மி­ழக்­காமல் 22 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

இதே­வேளை, இரண்டாம் இடத்­துக்கு கடும் போட்டி நில­வு­வ­துடன் பெரும்­பாலும் சம்பத் வங்கி அணிக்கும் மாஸ் யூனிச்­சேலா அணிக்கும் இடை­யி­லான போட்­டியில் வெற்­றி­பெறும் அணிக்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என நம்­பப்­ப­டு­கின்­றது. ஒரு­வேளை இந்தப் போட்­டியில் முடிவு கிட்­டாமல் எஞ்­சி­யுள்ள மற்­றைய போட்­டியில் டிமோ அணியை ஜோன் கீல்ஸ் அணி வெற்­றி­கொண்டால் ஜோன் கீல்ஸ் அணிக்கு இரண்டாம் இடம்­கி­டைக்கும்.

இவ வருடப் போட்­டி­களில் முதல் தட­வை­யாக 19 வய­துக்­குட்­பட்ட பாட­சா­லைகள் அணி பங்­கு­பற்­றி­யது.

அடுத்த வருடம் தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெ­ற­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­களில் பங்­கு­பற்­ற­வுள்ள இலங்கை அணி வீரர்­க­ளுக்கு சிறந்த அனு­ப­வத்தைப் பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகள் அணியை வர்த்தக கிரிக்கெட் சங்கம் இவ் வருடம் இணைத்துக்கொண்டது.

நிப்புன் தனஞ்­ச­யவின் தலை­மை­யி­லான பாட­சா­லைகள் அணி பலம்­வாய்ந்த டிமோ அணியை வெற்­றி­கொண்­டி­ருந்­தமை விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!