‘இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம்’ -பா.ஜ.க மூத்த தலைவர் வினீத் அகர்வால் கருத்து

0 35

இந்­தி­யாவில் காற்றை மாசு­ப­டுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளி­யிட்­டி­ருக்­கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா நேற்று­ தெரி­வித்­துள்ளார்.

டெல்­லியை சுற்­றி­யுள்ள மாநி­லங்­களில் விவ­சாய கழி­வு­பொ­ருட்­களை எரிப்­பதால் ஏற்­படும் கரும்­பு­கையால் டெல்­லியில் காற்று மாசு ஏற்­ப­டு­கி­றது.

வாக­னங்­க­ளாலும் இந்த பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது என்­ப­தற்­காக ஒற்றை இலக்கப் பதிவெண் அல்­லது இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாக­னங்­களை இயக்கும் நடை­முறை அமு­லுக்கு வந்­துள்­ளது.

டெல்­லியில் காற்று தர குறி­யீடு 500-க்கும் மேல் உள்­ளது. இது மித­மான அளவை விட 5 மடங்கு அதிகம் ஆகும். இந்­நி­லையில், பா.ஜ.க மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா கூறி­ய­தா­வது:- டெல்லி காற்று மாசு­பாட்­டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா கார­ண­மாக இருக்­கலாம்.

பாகிஸ்தான் ஏதேனும் விஷ வாயுவை வெளி­யிட்­டுள்­ளதா என்­பதை நாம் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வேண்டும். பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் உள்­துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து பாகிஸ்தான் விரக்­தி­ய­டைந்­துள்­ளது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக ஒரு வெற்­றியை கூட பதிவு செய்ய முடி­யா­ததால் பாகிஸ்தான் தந்­தி­ரங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. டெல்­லியில் காற்று மாசு ஏற்­ப­டு­வ­தற்கு குண்­டு­வெ­டிப்பு மற்றும் தொழிற்­சாலை­களின் நச்சு வாயுகள் வெளி­யேற்­றமே காரணம் என அரவிந்த் கெஜ்­ரிவால் மற்றும் பொது­மக்கள் கூறு­கின்­றனர்.

விவ­சாயம் நம் நாட்டின் முது­கெ­லும்­பாகும். விவ­சா­யி­க­ளையும் தொழில்­க­ளையும் குறை கூறக்­கூ­டாது. மோடியும் அமித்­ஷாவும் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்கும் திறன் கொண்­ட­வர்கள். மகா­பா­ர­தத்தில் வரும் கிருஷ்ணனை போன்றவர் மோடி. அதேபோல் அர்ஜுனனை போன்றவர் அமித்ஷா. இந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!