வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: நவம்பர் 07: 1944- அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தட­வை­யாக வென்­றார்…

0 152

1492: பிரான்ஸின் அல்சாஸ் பிராந்­தி­யத்தில் விண்­கல்­லொன்று வீழ்ந்­தது. உலகில் பதி­வு­செய்­யப்­பட்ட மிகப் பழை­மை­யான விண்கல் மோதல் இது­வாகும்.

1502: ஹொண்­டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்­தார்.

1665: இப்­போதும் வெளி­வரும் உலகின் மிகப் பழ­மை­யான பத்­தி­ரி­கை­யான “த லண்டன் கசெட்” முத­லா­வது இதழ் வெளி­யா­னது.

1893: அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

1944: அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தட­வை­யாக வென்­றார்.

1910: உலகின் முத­லா­வது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோ­த­ரர்களால் ஒஹை­யோவில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1917: அக்­டோ­பர் புரட்சி: விளா­டி­மிர் லெனின் தலை­மையில் கம்யூனிசப் புரட்­சி­யா­ளர்கள் ரஷ்­யாவின் இடைக்­கால அர­சாங்­கத்தைக் கவிழ்த்­த­னர். (பழைய ஜூலியன் நாட்­காட்­டியில் இது அக்­டோ­பர் 25 ஆம் திக­தி­யாகும்).

1917: முதலாம் உலகப் போர்: பிரித்­தா­னியப் படைகள் ஓட்­டோமான் பேர­ர­சிடம் இருந்து காஸாப் பகு­தியைக் கைப்­பற்­றின.

1918: மேற்கு சமோ­வாவில் பர­விய ஒரு வித வைரஸ் நோய் கார­ண­மாக 7,542 பேர் ஆண்டு முடி­விற்குள் இறந்­த­னர்.

1931: மா சே துங் சீன சோசலிச குடி­ய­ரசை அக்­டோ­பர் புரட்­சியின் நினைவு நாளில் அறி­வித்­தார்.

1941: இரண்டாம் உலகப் போர்: ”ஆர்மேனியா” என்ற சோவியத் மருத்­துவக் கப்பல் ஜேர்மனிய விமா­னங்­களின் குண்­டு­வீச்சில் மூழ்­கி­யது. 5,000 பேர் வரையில் இதில் கொல்­லப்­பட்­ட­னர்.

1941: நாஸி ஜேர்மனி­யர் உக்­ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்­ற­னர்.

1944: அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக 4 ஆவது தட­வை­யாக வென்று சாதனை படைத்­தார். (பின்­னர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஒரு­வர் இப்­ப­த­வியை வகிக்க முடி­யாது என சட்டத் திருத்தம் செய்­யப்­பட்­டது)

1956: சுயஸ் கால்வாய் பிரச்­சினை: எகிப்தில் இருந்து உட­ன­டி­யாக ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படை­களை வெளி­யே­று­மாறு ஐநா பொதுச் சபைக் கூட்­டத்தில் தீர்மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1983: ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செனட் கட்­ட­டத்தில் குண்டு வெடித்­தது.

1987: துனீ­ஷி­யாவில் ஜனா­தி­பதி ஹபிப் போர்குய்பா, பிர­த­மர் பென் அலி­யினால் பதவி கவிழ்க்­கப்­பட்­டார்.

1989: கிழக்கு ஜேர்மனியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்­டங்கள் கார­ண­மாக அமைச்­ச­ரவை கலைக்­கப்­பட்­டது.

1990: அயர்லாந்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக மேரி ரொபின்சன் தெரி­வா­னார்.

1991: அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற கூடைபந்தாட்ட வீர­ரான மெஜிக் ஜோன்சன் தாம் எச்.ஐ.வி. தோற்­றுக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக அறி­வித்து அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்டச் சங்­கத்­தி­லி­ருந்து (என்.பி.ஏ.) வெளி­யே­றி­னார்.

1996: செவ்வாய் கிர­கத்­துக்­கான “மார்ஸ் குளோபல் சர்வேயர்” விண்­க­லத்தை நாஸா ஏவி­யது.

1996: நைஜீ­ரிய விமா­ன­மொன்று லாகோஸ் அருகே வீழ்ந்­ததில் 143 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

2000: அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது. இத் தேர்தல் பெறு­பேறு ஜோர்ஜ் டபிள்யூ புஷ், அல் கோர் ஆகி­யோ­ருக்கு இடையில் ஏற்­பட்ட சர்ச்சை உயர்நீதி­மன்­றத்தின் மூலம் பின்­னர் தீர்க்கப்­பட்­டது.

2000: ஹிலாரி கிளின்டன் நியூ­யோர்க் செனட்­டர் பத­விக்­கான தேர்தலில் வென்­றார். அமெ­ரிக்க முதற்­பெண்­ம­ணி­யாக விளங்­கிய ஒரு­வர் அந்­நாட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வா­னமை இதுவே முதல் தட­வை­யாகும்.

2002: அமெ­ரிக்கப் பொருட்­களின் விளம்­ப­ரங்­களை அறி­விப்­ப­தற்கு ஈரான் தடை விதித்­தது.

2004: ஈராக்கில் கிளர்ச்சியா­ளர்களின் கோட்­டை­யான பலு­ஜாவில் அமெ­ரிக்கப் படைகள் பாரிய தாக்­கு­தலை ஆரம்­பித்­த­தை­ய­டுத்து ஈராக்­கிய இடைக்­கால அர­சாங்கம் 60 நாள் அவ­சர பிர­க­டனம் செய்­தது.

2007: பின்­லாந்தில் பாட­சா­லை­யொன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் 9 பேர் உயி­ரி­ழந்­த­னர்.
2012: குவாத்­த­மா­லாவில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 52 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

 

2017: தரக்­கு­றை­வான எரி­பொ­ருளை ஏற்றி வந்த கப்­ப­லொன்று எரிபொ­ருளை இறக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததையடுத்து 2017 நவம்பர் 3 முதல் 11 ஆம் திகதிவரை நாட்டில் பெற்றோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது.

2017: ஆப்கானிஸ்தானின் ஷம்ஷாத் தொலைக்காட்சி நிலையத்தின் மீது ஐ.எஸ். அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பலியானதுடன் 20 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!