தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!

0 581

தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் கொலைச் செய்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இன்று(07) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றினுள் 35 வயதான மனைவியையும், 3 வயதான மகன் மற்றும் ஒரு மாதம் வயதான குழந்தை ஆகியோரை கழுத்து நெரித்து கொலை செய்து தீயிட்டு எரித்தமை தொடர்பில் மதுரங்க டி சில்வா என்ற நபர் குற்றச்சாட்டப்பட்டிருந்தார்.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், பிரதிவாதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் மரண தண்டனையளித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!