யார் வென்றாலும் யார் தோற்றாலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரச்சினை வராது! – தவம்

0 520

                                  (எம்.எல்.சரிப்டீன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் அமைக்கப்படும் ஆட்சி என்பது ஒரு நாளுமே முழுமையான வடிவம் கொடுக்கின்ற, எல்லா சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஓர் அரசாங்கமாக அமையாது என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இல்லாத ஆட்சி முழுமை பெறாது என்பதற்கு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு எமது கட்சியின் எம்பிக்களும் அதன் தலைமையும் இராஜினாமாச் செய்த போது பிரதமரே ஆடிப்போனது சாட்சியாக அமைகிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு முஸ்லிம்கள் இல்லாத இலங்கையின் ஓர் அமைச்சரவையாக அந்த மாறியிருந்தது. இது இலங்கைக்கு வெளிநாடுகளில் மிகப் பெரும் அவப் பெயராக அமைந்துவிடும் என்று பிரதமர் மாத்திரமல்லாமல் பௌத்த பீடங்களும் ஆடிப்போகின . அமைச்சுப் பதவிகளை மீண்டும் எடுக்கவேண்டும் என்றார்கள். இதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.  

யார் வென்றாலும் யார் தோற்றாலும் அரசியல் என்று பார்க்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!