துருக்கி, ஈரான், எகிப்து, ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு

0 40

வெங்­காயம் விலை வெகு­வாக உயர்ந்­த­தை­ய­டுத்து, எகிப்து, ஈரான், துருக்கி மற்றும் ஆப்­கா­னிஸ்தான் நாடு­களில் இருந்து வெங்­காயம் இறக்­கு­மதி செய்ய இந்­திய அரசு தீர்­மா­னித்­துள்­ளது.

நாட்டின் முக்­கிய உணவுப் பொரு­ளாக இருப்­பது வெங்­காயம். சரா­ச­ரி­யாக ஒரு கிலோ­வுக்கு ரூபா 20-லிருந்து 25 ஆக விற்­கப்­படும் வெங்­கா­யத்தின் விலை தற்­போது கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த மாதத்தில் வெங்­காயம் 1 கிலோ ரூ.80 வரை உயர்ந்­தது. கடந்த 2 நாட்­களில் சில மாநி­லங்­களில் 1 கிலோ ரூ.90 வரை உயர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வி­லேயே மகா­ராஷ்­டிர மாநிலம் நாசிக் பகு­தியில் தான் அதிக அளவில் வெங்­காயம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், விலை உயர்­வுக்கு வட­மா­நி­லங்­களில் பெய்த கடும் மழை தான் காரணம் என்றும் வியா­பா­ரிகள் தெரி­வித்­தனர்.

பல இடங்­களில் தண்ணீர் தேங்கி வெங்­காயம் அழு­கி­விட்­டது. அறு­வடை செய்த வெங்­கா­யத்­தையும் உரிய முறையில் சேமித்து வைக்க முடி­ய­வில்லை. இதனால் மார்க்­கெட்­டுக்கு வெங்­காயம் வரு­வது குறைந்­து­விட்­டது.

இந்­நி­லையில், வெங்­காயம் விலையை கட்­டுப்­ப­டுத்தும் வகையில், துருக்கி, ஈரான், எகிப்து மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நான்கு நாடு­களில் இருந்து வெங்­காயம் இறக்­கு­மதி செய்ய மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. முதல் கட்­ட­மாக 80 முதல் 100 கண்­டெய்­னர்கள் வரை இறக்­கு­மதி செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பருவம் மாறி மழைபெய்வதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!