கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன், மனைவி கொலை!

0 414

                                                                                                                                  (எம்.மனோசித்ரா)
கனேமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவனும் மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
புதன்கிழமை இரவு 10.15 மணியளவில் கனேமுல்ல – ஹொரகொல்ல பிரதேசத்தில் இந்த இரட்டை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கனேமுல்ல – ஹொரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 72 மற்றும் 73 வயதுயைடவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!