தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்பை பேணிய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

0 397

                                                                                                 (மட்டு.சோபா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் செயற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் முகதமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இன்று (07) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார். இவர்களில் நால்வர் பெண்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!