65 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன்

0 44

உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் இன்று.

1959- இல் ஐந்து வயது சிறுவனாக திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் அறிமுகமானவர் கமல்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கும் கமலுக்கு இது 60- ஆவது வருடம்.

இது எல்லாவற்றையும் சேர்த்து சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவர் 60 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக இன்று நவ., 7, 8, 9 ஆம் திகதிகளில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இன்று பரமக்குடியில் தன் தந்தையின் சிலையை அவரது இல்லத்தில் திறந்து வைக்கிறார் கமல். தொடர்ந்து நாளை எல்டாமஸ் ரோட்டில் உள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும், அங்கு சினிமாவில் தன் குருநாதரான மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையையும் திறந்து வைக்கிறார்.

நாளை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது.

தொடர்ந்து நவ.,9 இல் நடைபெற இருந்த இளையராஜா நிகழ்ச்சி, நவ.,17க்குமாற்றப்பட்டுள்ளது.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி உடன் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடத்துகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!