செய்த தவறுக்காக வருந்தும் நயன்தாரா

0 107

நடிகை நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களாக பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் ‘வோக்’ பத்திரிகையில் அட்டைப்படத்தில் இடம் பெற்ற அவர், அந்த பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்திருந்­தார்.‘

வோக்’ பத்திரிகையில் பேட்டி இடம் பெற்றதோடு, அட்டையில் இடம் பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

ஆனால், அவர் பத்திரிகைகள் எவற்றுக்கும் பேட்டி கொடுக்கா­த­தோடு, திரைப்படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அதை ஒரு ெபாலிசியாகவே அவர் கடைப் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் வானொலி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திரையுலக வரலாற்றில் நான் ஒரு பெரிய தவறை செய்திருக்கிறேன்.

அது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கஜினி’ படத்தில் நடித்தது தான்.

அதில் சித்ரா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி கெரக்டர் எனக்கு வழங்கப்பட்டது.

அந்தக் கேரக்டரில் எல்லாம் எந்தத் தவறும் கிடையாது.

ஆனால், படத்தில் நான் கமிட்டாவதற்கு முன், என்னிடம் சொல்லப்பட்ட கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை.

என்னுடைய கெரக்டர் குறித்து சொல்லப்பட்டதற்கும் படமாக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை.

இதனால், நான் முழுமையாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்­தேன்.

அதனால்தான், நான் ஒவ்வொரு படத்திலும் கமிட் ஆவதற்கு முன், நிறைய விஷயங்களில் கெடுபிடி காட்டு­கிறேன்.

ஏனென்றால், சொல்வதற்கு மாறாக, பின்நாட்களில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

சொல்லப் போனால், அது ஒரு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைதான்.

அதனால், நான் கெடுபிடிக்காரி என்று சொன்னால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

நான் தொடர்ந்து இப்படித்தான் இருப்பேன். நான் படங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு, இந்த கெடுபிடியும் ஒரு காரணம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!