தூய்மையான மனித உறவுகளுக்காகத்தான் நானும் கோஹ்லியும் வாழ்கிறோம்: பூட்டான் அனுபவம் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா            

0 147

தூய்­மை­யான மனித உற­வு­க­ளுக்­கா­கத்தான் தானும் விராத் கோஹ்­லியும் வாழ்­வ­தாக என பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர் விராட் கோஹ்லி கடந்த 5 ஆம் திகதி தனது 30 ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டினார்.

அவ­ருக்கு கிரிக்கெட் வீரர்கள், பொலிவூட் பிர­ப­லங்கள், அர­சியல் தலை­வர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரி­வித்து வரு­கி­றார்கள்.

ஆனால், கோஹ்­லியும் அவரின் மனை­வி­யான நடிகை அனுஷ்கா சர்­மாவும் இவ்­வாரம் பூட்­டா­னில் மலை­யேறும் பயிற்­சியில் ஈடு­பட்­டனர்.

அப்­போது விராட் கோஹ்­லி­யையும், தன்­னையும் யாரென்றே தெரி­யாத ஒரு குடும்பம் இருந்­ததை மிகவும் மகிழ்ச்­சி­யுடன் தனது டுவிட்டர் பதிவில் தெரி­வித்­துள்ளார் அனுஷ்கா சர்மா.

இது தொடர்­பாக அனுஷ்கா சர்மா தனது பதிவில், இன்று, எங்கள் 8.5 கிலோமீற்றர் மலை­யேற்றப் பய­ணத்­தின்­போது, பிறந்த நான்கு மாதங்­களே ஆன கன்­றுக்­குட்­டியைக் கொஞ்­சு­வ­தற்­கா­கவும், அதற்கு உணவு தரு­வ­தற்­கா­கவும் மலையில் ஒரு சிறிய கிரா­மத்தில் நிறுத்­தினோம்.

அப்­போது அந்த வீட்டின் உரி­மை­யாளர், நாங்கள் சோர்­வ­டைந்து இருக்­கி­றோமா, தேநீர் வேண்­டுமா என்று கேட்டார்.

அதனால் நாங்கள் அழ­கான, அன்­பான குடும்பம் இருக்கும் அந்த வீட்­டுக்குள் சென்றோம்.

அவர்­க­ளுக்கு நாங்கள் யார் என்று தெரிய­வில்லை. இருந்­தாலும் எங்­களை அன்­போடு நடத்­தி­னார்கள்.

அவர்­க­ளுடன் தேநீர் அருந்தி, சில நிமி­டங்கள் பேசினோம். பேசி முடிக்கும் வரை எங்­களை மலை­யேறிச் சோர்­வ­டைந்த இரண்டு நபர்கள் என்றே பார்த்­தார்கள். இப்­ப­டி­யான உண்­மை­யான, எளி­மை­யான, தூய்­மை­யான மனித உற­வு­க­ளுக்­கா­கத்தான் நானும் கோஹ்லி­யும் வாழ்­கிறோம் என்­பதை எங்கள் இரு­வரின் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கும் தெரியும்.

எதையும் எதிர்­பார்க்­காமல் இரண்டு அந்­நி­யர்­க­ளிடம் கனி­வாக நடந்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் நினைத்­தது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யையும், அமை­தி­யையும் தரு­கி­றது. வாழ்க்­கையின் உண்­மை­யான அர்த்தம் இதைத் தவிர வேறென்­ன­வாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரி­ய­வில்லை. இந்தச் சம்­ப­வத்தை நாங்கள் என்றும் நினைவில் வைத்துக் கொண்­டா­டுவோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!