புத்தியாய் இருங்கப்பா… (சிறுகதை- சிலாபம் திண்ணனூரான்)

0 274

சிலாபம் திண்ணனூரான்

எங்கள் தோட்­டத்து ஆத்து லயத்து ஆல­ம­ரத்­த­டியில் மீனாட்சி அம்­மாயி பரி­தா­ப­மாக நின்று கொண்­டி­ருந்தார்.

“என்னா அம்­மாயி இங்கே நின்னு கிட்­டி­ருக்­கீங்க…?” என்றேன்.“இடேய் நான் எங்கு நின்­னு­கிட்­டி­ருந்­தாலும் ஒனக்கு என்­னடா. தொண்­ணூத்தி ரெண்டு வய­சான இந்த கிழ­வியைப் பார்த்து நையாண்டித் தனமா சிரிக்­கிற. ஏய் தெரிஞ்­சுக்க.

 

இந்த தோட்­டத்­தில்ல பதி­மூன்று புள்­ளை­களை பெத்­தவ நான் ஒருத்தி தான்டா. எனக்கு அஞ்சு டசின் பேரப்­புள்­ளக இருக்கு. மூனு டசின் பூட்­டப்­பிள்­ளக இருக்கு. ஏன்டா ஒனக்கு எப்­பவும் என்­னோட வம்பு இழுக்­கி­றது தான் வேலையாய் போச்சு”“அப்ப இந்த சேதிய பேப்­பர்ல போட்­டு­டு­வோமா அம்­மாயி?”

“ஏன்டா ஒனக்கு சூடு, சொரண இல்­லையா? கூறு கெட்ட பயலா இருக்க. என்­னூட்டு அனு­ப­வத்­தில ஒன்னையப் போல ஒரு­வன இது­வரை கண்­டதே இல்­லேடா”“சும்மா பொய் சொல்­லா­தீங்க அம்­மாயி”“ஏய் நான் ஏன்டா பொய் சொல்­லணும்.

நான் பொய் சொன்னா நீ என்னா துட்­டுவா கொடுக்கப் போற? மாங்காய் மடை­ய­னாட்டம் பேசாத.”

“சரி சும்­மாதான் கேட்­கிறேன் அம்­மாயி. தீபா­வ­ளிக்கு வாயில்­லேயே வடை சுட்­டீங்­களா? இல்­லாட்டி பச்சைத் தண்­ணி­யில்ல சுட்­டீங்­களா?”“ஏய் செவ­சாமி அப்­ப­டியே அலாக்­காக தூக்கி போட்டு நாலு மிதி மிதிச்­சுப்­பு­டுவேன்.

வெள்­ளைக்­கார துரை­மா­ரையே தமி­ழில்ல திட்டி அடக்கி வச்­ச­வ­ளடா நானு. நான் தமி­ழில்ல திட்­டுவேன். அவள் இங்­கி­லீஸ்ல்ல திட்­டு­வான்.

எங்க ரெண்டுப் பேருக்­குமே பாஷை வௌங்­காது. அப்­பேர்­பட்ட என்­னுக்­கிட்­டேயே நீ எந்த நாளும் விளை­யாட்டுக் காட்­டுற. ஒரு நாளைக்கு இருக்­கு­தடா ஒனக்கும் கூத்து. அப்­பத்தான் நீ திருந்­துவ. கொலைக்கத் தெரி­யாத நாயீ குப்­புற படுத்­துச்சாம். அந்த மாதிரி என்­னய்ய நீ நெனைச்­சுக்­கிட்டு இருக்க”

“நல்­லத்தான் பேசு­றீங்க அம்­மாயி”“ஏய் நீ என்­னைய்ய உசுப்­பி­விட பார்க்­கிற. அதுக்கு எல்லாம் நான் பயந்­தவ இல்­லை­யடா இந்த மீனாட்சி. என் புரு­ச­னையே அடக்கி வச்சு இருந்­தவ. அது தான்டா தொண்­ணூத்தி ரெண்டு வய­சில்­லையும் சவுக்கு மரம் மாதிரி கம்­பீ­ரமா இருக்கேன்”“ஆமாம். அந்த தாத்தா எப்­ப­டித்தான் ஒங்­க­ளோட காலம் கழித்­தாரோ அந்த கட­வு­ளுக்குத் தான் தெரியும்.”
“ஏன்டா எதுக்கு எடுத்­தாலும் கட­வுளை அழைக்­கி­றீங்ய…

கடவுள் இருந்தா இவ்­வ­ளவு அநி­யாயம் நம்ப சனத்­துக்கு நடக்­குதே. வாயைத் தொறந்து ரெண்டு வார்த்­தைய பேச வேண்­டி­யது தானே. வாயில்ல என்னா கொழுக்­கட்­டை­யையா வச்­சி­ருக்க. கட­வு­ளையும் டிஸ்டப் செய்­யா­தீங்க. அந்தக் கட­வு­ளையும் வச்சு எவன் எவனோ பொழைக்­கிறான். அந்த மாதிரி ஏமாத்து வாழ்க்­கையை நானும் தாத்­தாவும் வாழ இல்ல. ஒங்க மாதிரி இல்லை. நாங்க ரெண்டு பேரும் சந்­தோ­சமா வாழ்ந்தோம்.

இல்­லாட்டி பதின்­மூணு பிள்­ளை­களை என்­னால்ல பெத்­துக்க முடி­யுமா? பதின்­மூணு பிள்­ளை­க­ளையும் தோட்­டத்து பத்­துக்கு எட்டு நீள, அக­லத்தைக் கொண்ட காம்­பி­ரா­வில்­லத்தான் பெத்தேன். ஆஸ்­பத்­திரி பக்கம் போகவே இல்லை. ஆயம்மா கூட என் உடம்­பில்ல கையை வைக்­கவே இல்ல. எங்க வீட்­டுக்­கா­ரரு. பழக, பழக இனி­மையா பேசு­வாரு (அம்­மாயி நாணத்­துடன் தலை சாய்த்தார்) அவரு பார்­வை­யில்ல மிடுக்கு இருக்கும்.

எதையும் சாதிக்கும் வல்­லமை கொண்­ட­வரு. மனுசன் மருந்துக் கங்­காணி. நான் ஒருநாள் பீலி­யில்ல குளிச்­சிக்­கிட்டு இருந்­தப்ப என் இடுப்பை உன் இடுப்பு அல்வா மாதிரி இருக்­குன்னு சொன்­னாரு. அன்­னைக்கே எங்­க­ளுக்­குள்ள தீ பத்­திக்­கிச்சு. (மீண்டும் அம்­மாயி முகம் சுழித்து வெட்­கப்­பட்டு சிரித்தார்.) நானு அவரை ஐயாக் கண்­ணுன்­னுத்தான் அழைப்பேன். அவரு என்­னைய்ய மீனா பொண்­ணு­னுத்தான் கூப்­பி­டு­வாறு.”

“அம்­மாயி நீங்க சின்ன வய­சில்ல நல்ல, நல்ல கூத்து எல்லாம் ஆடித்தான் இருக்­கி­றீங்க” என நான் சொன்­னதும் அம்­மா­யியின் முகம் சுருங்­கி­யது. எனக்கும் அம்­மா­யியை தொடர்ந்து பார்க்க இய­ல­வில்லை. இவ்­வ­ளவு நேரம் அம்­மா­யியை ஆல­ம­ரத்துக் குத்­துக்­கல்லில் உட்­கார வைத்து நையாண்டித் தன­மாக கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபம் மூட்­டிய எனக்கு என்­னதோ பெரிய தவறு செய்­து­விட்ட குற்ற உணர்வு என் மனசில் குதித்­தது.

மீண்டும் அம்­மா­யி­யியை கேள்வி கேட்டு நச்­ச­ரிக்க என்னால் இய­ல­வில்லை. துணிவை வர­வ­ழைத்து மீண்டும் மீனாட்சி அம்­மா­யியை உசுப்பி விட்டேன்.

“நான் என்னா கூத்து அடிச்­சேனா? இப்ப வாழ்ற சிறு­சுகள் கையில்ல போனை வச்­சுக்­கிட்டு குத்­திக்­கிட்டு கெடக்­குற வாழ்க்­கைய வாழ இல்­ல. அந்தக் காலத்­தில்ல யாருமே விரும்பி கல்­யாணம் செய்ய இய­லாது. பெரி­ய­வங்க சாதிப் பார்த்­துதான் கல்­யாணம் செஞ்சு வைப்­பாங்க. சாதி விட்டு கல்­யாணம் செஞ்­சிக்­கிட்டா தோட்­டத்தை விட்டே துரத்தி விட்­டு­ரு­வாங்க. இந்த சாதி வேறு­பாட்டு சங்­கதி எல்­லாத்­தையும் ஒடைச்சுப் போட்­டுத்தான் நாங்க ரெண்டு பேரும் முனி­யாண்டி கோவி­லில்ல கள்­ளத்­த­னமா தாலி கட்­டிக்­கிட்டோம்.

எங்க சாதி­ச­னமே எதிர்த்­திச்சு. தோட்­டத்தை விட்டு எங்­கா­வது போங்­கன்னு சாதி­சனம் பெரிய கலாட்டா பண்­னு­னாங்க. என் புரு­சனும் கொஞ்சம் சண்­டித்­தனம் காட்ட எல்­லோரும் அடங்கிப் போயிட்­டாங்க. வெள்­ளைக்­கார துரை பீலி லயத்­துள்ள ஒரு காம்­ப­ராவை கொடுத்­தாரு. மக­ராசன் நல்ல இருக்க. அந்தக் காம்­ப­ரா­வில்­லத்தான் தனிக்­கு­டித்­தனம் செஞ்சு பதி­மூனு பிள்­ளை­களை பெத்­தெ­டுத்தேன்.

எங்­க­ளுக்கு ரெண்டு வீட்­டி­லயும் சீர்­வ­ரிசை ஒன்­றுமே கெடைக்­க­ல்லை. இவ்­வாறு தான் என் புரு­ச­னுக்கு முந்­தானை விரிச்­சேன்டா”“வேறு யாரும் ஒங்­களை அம்­மாயி அந்த காலத்­தில்ல லவ் பண்­ணல்­லயா?”
“இந்தா ஒன்­னூட்டு மரு­வாதி எல்லாம் கெட்டுப் போயிடும் படுவா. நாங்க மானம் மரி­யா­தை­யோட வாழ்ந்­த­வங்க. நீ ரொம்­பவும் கிண்டல் பண்ற? உன் பேச்­சில்ல சுத்தம் இல்ல. உன் சேர்­வாரும் சரி­யில்லை. இந்தா பார்த்­துக்க நமக்­குன்னு தனி­யான பண்­பாடு இருக்கு. ஒரு நாள் கொந்­த­ரப்பு கங்­காணி நான் கொந்­த­ரப்பு வெட்­டு­ரப்ப என் இடுப்­பில்ல கையை வச்­சுப்­புட்டான்.

விட்டேன் பாரு ஒரு அடி சொரண்­டி­யால்ல. அவ­னூட்டு நொட்­டாங்­கை­யில்ல ரெத்தம் வடிய வடிய ஓடிட்டான். அந்த நாளில்ல இருந்து எங்க தோட்­டத்து பெரியக் கங்­காணி, மருந்து கங்­காணி, கொழுந்து கங்­காணி, கவ்­வாத்து கங்­காணி, எவ­ருமே என்­கிட்ட வாலாட்ட மாட்­டாங்க.

அந்த காலத்­தி­லேயே தோட்­டத்து வெள்­ளைக்­கார துரை­மாரும் என் மீது ஒரு கண் வச்­சுத்தான் இருந்­தா­னுக. அதுக்­கெல்லாம் இந்த மீனாட்சி இடம் கொடுக்­கல்ல. இந்த மீனாட்சி தமி­ழச்­சிடா. தமி­ழச்­சுக்­கென ஒரு பண்­பாடு இருக்கு. நாங்க மது­ரை­யையே எரிச்ச கண்­ணகி தாயை வணங்கும் பரம்­பரை. எமக்­கென மானம் மரி­யாதை இருக்கு” என்­றதும் நான் அம்­மா­யியை இவ்­வ­ளவு நேரமும் குழப்­பி­யது தவறு என்­பதை உணர்ந்­து எனது கண்­களில் கண்ணீர் அலை மோதி­யது.
மீனாட்சி அம்­மாயி …

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!