பாகிஸ்தான் நடிகை மஹீரா கான் யூ.என்.எச்.சி.ஆர். நல்லெண்ணத் தூதுவரானார்

0 1,087

அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) பாகிஸ்­தா­னுக்­கான நல்­லெண்ணத் தூது­வ­ராக பாகிஸ்தான் நடிகை மஹீரா கான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

34 வய­தான மாஹிரா கான் பாகிஸ்­தானின் முன்­னணி நடி­கை­களில் ஒருவர்.

பொலிவூட் எனும் பாகிஸ்தான் திரைப்­ப­டத்­து­றை­யிலும் பொலிவூட் எனும் ஹிந்தித் திரைப்­ப­டத்­து­றை­யிலும் அவர் பிர­ப­ல­மா­னவர்.

ராயீஸ் எனும் பொலிவூட் திரைப்­ப­டத்தில் ஷாருக் கானின் ஜோடி­யாக மஹிரா கான் நடித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இன்ஸ்­டா­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் 50 இலட்சம் ரசி­கர்­களைப் பெற்ற முதல் பாகிஸ்தான் நட்­சத்­திரம் எனும் பெரு­மையை கடந்த மாதம் அவர் பெற்­றுக்­கொண்டார்.

இந்­நி­லையில் யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பின் பாகிஸ்­தா­னுக்­கான நல்­லெண்ணத் தூது­வ­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை இஸ்­லா­மாபாத் நகரில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில், யூ.என்.எச்.சி.ஆர். உதவி உயர்ஸ்­தா­னிகர் ஜோர்ஜ் ஒகோத் ஒப்போ, மஹீரா கானுக்­கான நிய­மன சான்­றி­தழை கைய­ளித்தார்.

பாகிஸ்­தா­னி­லுள்ள சுமார் 14 இலட்சம் ஆப்­கா­னிஸ்தான் அக­தி­களின் நிலையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக, மஹீரா கான் 2018 ஆம் ஆண்டு முதல் யூ.என்.எச்.சி.ஆர். அமைப்புடன் இணைந்து பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!