தமிழர்களின் இருப்பை அபகரிக்க முயற்சிக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளோடு சேர்ந்து கூத்தடிக்கும் கூட்டமைப்பினர்! வியாழேந்திரன் எம்.பி

0 2,124

                                                                                                                              (கல்குடா நிருபர்)

நல்லிணக்கம் பேசிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அபகரிக்க முயற்சிக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளோடு சேர்ந்து கூத்தடிக்கும் நபர்களாக சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கிலே செயற் பட்டு வருவதன் விளைவால் 58.9 சத விகிதமாக இருந்த தமிழர்களின் இன விகிதாசாரம் 38 சத விகிதத்துக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கறுவாக்கேணியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு இறுதிச் சந்தர்ப்பம். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கு முன்னிருந்த அரசியல் தலைவர்கள் சாணக்கியமாகவும், ராஜதந்திரமாகவும் செயற்பட்டிருந்தால் நாங்கள் இன்று வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய அவசியம் வந்திருக்காது.

இவர்களே தமிழ் சமூகத்தினுடைய இருப்பை அழிக்கின்ற செயற்பாட்டிலே முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து கட்சிகள் சேர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையிலே கூடி 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

கடைசியிலே தங்களோடு இணைந்த நான்கு கட்சிகளுக்கும் தெரியாமல் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் வவுனியாவில் கூடி ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக கூறியிருக்கின்றார்கள். இதைதான் நான் இரண்டு மாதத்திற்கு முன்னரே கூறியிருந்தேன்.

கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று கூறும் சில தமிழ்க் கட்சிகளில் தலைவர்கள், கொள்கை பரப்பாளர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கை மீட்பதற்கு முன் நாம் இவர்களிடமிருந்து கிழக்கை மீட்க வேண்டும். இவர்களிடமிருந்து கிழக்கிலுள்ள எமது மக்களை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!