சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய சிறிய தந்தை, தரகர் கைது!

0 765

                                                                                                                               (கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் சிறிய தந்தையும்  தரகரும்    கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (07) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து புதன்கிழமை (06) இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தந்திரமாகப் பேசி குறித்த தரகரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்  செய்தார்கள் என சந்தேகிக்கப்படும்  ஆசிரியர்  உட்பட ஐவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!