டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி!

0 1,663

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறக்கட்டளை நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திவரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேசன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டதுடன் இது தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயோர்க் நீதிமன்றம் அவருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த   நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார்.(நன்றி தமிழத் தந்தி)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!