அதாவுல்லாஹ்வின் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் இடையூறு: கூச்சல், குழப்பம், கல்வீச்சு. வாகனங்கள் சேதம், ஒருவர் காயம்

0 3,106

             
                                                                                            (ரீ.கே.றஹ்மத்துல்லா)
ஜனாதிபதி வேட்டாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவை ஆதரித்து, அட்டாளைச்சேனையில் நேற்று (07) இரவு தேசிய காங்கிரஸ் நடத்திய பிரசாரக் கூட்டத்தின் மீது, சிலர் கூச்சலிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தி, கல் வீசித் தாக்குதல்களையும் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது.
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஎல்லா குறித்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு சிலர் கூச்சலிட்டதோடு, கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.இதனால், அங்கு பதட்டமானதொரு சூழ்நிலை உருவானது.

ஆயினும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் மேலதிக பொலிஸாரும் உடன் வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும், இதன்போது அங்கிருந்த அதாவுல்லாஹ் தரப்பினரின் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களே இந்த காடைத்தனத்தை நடத்தியதாக இது குறித்து அதாஉல்லா தரப்பினர் குற்றம் சாட்டினர்.

மேலும், ‘ஜனநாயக ரீதியாக எமக்கு விரும்பிய கட்சியை ஆதரித்து, எமது கருத்துக்களை மேடையமைத்து வெளியிடும் போது, இவ்வாறு காடைத்தனமாக இடைஞ்சல்களை ஏற்படுத்தியமையானது அருவருப்பான செயலாகும்’ என்றும், அதாவுல்லா தரப்பினர் தெரிவித்தனர்.

மேற்படி கூட்டத்தில் இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது உரையை முழுமையாக நிறைவு செய்து விட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!