காத்தான்குடியில் சாதாரண முஸ்லிம்கள் ஸஹ்ரானுக்கு எதிராகவே காணப்பட்டனர்! -SSP உபாலி ஜயசிங்க

0 1,204

                                                                                                                                (எம்.எப்.எம்.பஸீர்)
நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது மொஹம்மட் ஸஹ்ரானை அறிந்திருந்தேன். அப்போது அவர் ஒரு மத போதகராக அல்லது விமர்சகராகவே கருதப்பட்டார்.எனினும் அப்போதும் கூட காத்தான்குடி பகுதியில் உள்ள அனைத்து சாதாரண முஸ்லிம்களும் ஸஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

மேலும், அப்போது சுமார் 27 முஸ்லிம் உப பிரிவுகள் இருந்தன. அதில் ஒன்றுக்கே ஸஹ்ரான் தலைவனாக இருந்தான். ஸஹ்ரானின் நடவடிக்கைகள் அல்லது நிலைப்பாடுகள் சாதாரண முஸ்லிம்களைப் பாதித்ததால் அவர்களிடையே மோதல்களும் பதிவாகியிருந்தன.

அதன் பின்னணியிலேயே சாதாரண முஸ்லிம்கள் ஸஹ்ரான் மீது கடும் கோபத்தில் இருந்தனர். என குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறும் போது கொழும்பு மத்திய பொலிஸ் வலயத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராகவும் இருந்த உபாலி ஜயசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் இன்று (08) சாட்சியமளித்தார்.

ஸஹ்ரான் சாதாரண சம்பிரதாய முஸ்லிம்கள் , அவர்களது வழிபாட்டு முறைமையை விமர்சிக்க தொடர்ங்கியதிலிருந்து அவர் மீதான கோபம் உருவாகியுள்ளதாக நான் அறிந்தேன்.

அப்போது ஸஹ்ரானுக்கு எதிராக பிடியாணை இருந்ததாகவோ பயங்கரவாத புலனாய்வு விசாரணைகள் இருந்ததாகவோ நாம் அறியவில்லை. அவருக்கு அரசியல் தொடர்புகள், பின்னணிகள் இருந்ததாகவும் நான் அறியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!