மாவனல்லை ஹெம்மாத்தகமவில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற யுவதி பாலியல் துஷ்பிரயோம்! நடவடிக்கை எடுக்கத் தவறிய 3 பொலிஸார் பணி இடைநீக்கம்!

0 761

                                                                                                                                (எம்.மனோசித்ரா)
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாத்தகம பிரதேசத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்த யுவதியை ஒருவர், நபர் ஒருவரால் பாலியல் துஷ்பிரோயகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கையில்,

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான யுவதி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அ வர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய ஹெம்மாத்தகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர், சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மாஅதிபரின் ஆலோசனைகமைய பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!