பலவீனமான அரசியல்வாதிகளின் ஆயுதங்களே இனவாதமும், அடிப்படைவாதமும்!-அநுர குமார

0 1,039

                        (இராஜதுரை ஹஷான்)
அடிப்படைவாதிகளினதும் இனவாதிகளினது ம் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ள பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களினால் எவ்வாறு இனவாதத்தை இல்லாதொழிக்க முடியும். புதிய சட்ட திருத்தத்தின் ஊடாக அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்போம். . இனவாதத்தை ஆயுதமாக கொண்டே இரு தரப்பினரும் அரசியல் செய்கின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகயிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதாக இரு தரப்பினரும் தேர்தல் பிரசார மேடைகளில் கூறிக் கொள்கின்றார்கள். ஆனால் இவர்களே இனவாதத்தை தோற்றுவித்து, தங்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. பலவீனமாக அரசியல்வாதிகளின் ஆயுதமாகவே இனவாதமும், அடிப்படைவாதமும் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு உட்டப அனைத்து தரப்பினரது ஆதரவையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்ற அடிப்படைவாதம் பிறிதொரு மதத்தின் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்கம் செலுத்தியது. இதனை அனைவரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!